Published:Updated:

மனோ தங்கராஜ் தேர் வடம்பிடிக்க பாஜக எதிர்ப்பு; `அரோகரா’ அனிதா ராதாகிருஷ்ணன் - குமரியில் நடந்தது என்ன?

காவித்துண்டு போட்டபடி வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ண்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவித்துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு அமைச்சர் மனோ தங்கராஜுடன் சேர்ந்து தேரை வடம்பிடித்து இழுத்தார். அனிதா ராதாகிருஷ்ணன் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என கோஷம் எழுப்பியபடி வடம்பிடித்து இழுத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், வேளிமலை குமாரசுவாமி கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் எனப்படும் தேர்த் திருவிழா நடைபெற்றது. முதலில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நடந்த தேரோட்டத்தை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர் வடம் பிடித்து தொடங்கிவைத்தனர்.

அடுத்ததாக வேளிமலை குமாரசுவாமி கோயில் தேரோட்டத்தை வடம்பிடித்து தொடங்கிவைக்க அமைச்சர்கள் இருவரும் சென்றனர். அப்போது கடவுள் நம்பிக்கை இல்லாத, மாற்று மதச் சிந்தனைகொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் தேர் வடம்பிடித்து இழுக்கக் கூடாது என பா.ஜ.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேர் வடம்பிடித்து இழுக்கும் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன்
தேர் வடம்பிடித்து இழுக்கும் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன்

இதையடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவித்துண்டை கழுத்தில் போட்டபடி கோயில் வளாகத்துக்கு வந்தார். பின்னர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவித்துண்டை இடுப்பில் கட்டிவிட்டு அமைச்சர் மனோ தங்கராஜுடன் சேர்ந்து தேரை வடம்பிடித்து இழுத்தார். அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என கோஷம் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையே அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம்பிடித்து இழுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, மாவட்டத் தலைவர் தர்மராஜ் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், போராட்டத்தைத் தடுத்த போலீஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பா.ஜ.க-வினருக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினரை போலீஸார் கைதுசெய்தனர்.

பா.ஜ.க-வினர் போராட்டம்
பா.ஜ.க-வினர் போராட்டம்

பா.ஜ.க-வினர் எதிர்ப்பையும் மீறி நாங்களும் பக்தர்கள்தான் எனக் காண்பிக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவித்துண்டு அணிந்து, `அரோகரா’ கோஷம் போட்டது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism