Published:Updated:

``ஆங்கிலேயர்களுக்கு வேலைசெய்தவர்கள் எங்களை தேசவிரோதிகள் என்பதா..?!" - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு

மல்லிகார்ஜுன கார்கே ( கோப்புப் படம் )

``ராகுல் காந்தியே இதற்கு பதிலளிப்பார், அதனால்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். இல்லையென்றால் அவருக்கு ஏன் நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பளிக்கவில்லை." - மல்லிகார்ஜுன கார்கே

Published:Updated:

``ஆங்கிலேயர்களுக்கு வேலைசெய்தவர்கள் எங்களை தேசவிரோதிகள் என்பதா..?!" - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு

``ராகுல் காந்தியே இதற்கு பதிலளிப்பார், அதனால்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். இல்லையென்றால் அவருக்கு ஏன் நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பளிக்கவில்லை." - மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே ( கோப்புப் படம் )

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, லண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றியதிலிருந்தே, பா.ஜ.க தரப்பினர் பலரும் அவரைச் சாடிவருகின்றனர். இந்தியாவின் நன்மதிப்புகளை, ராகுல் காந்தி வெளிநாடுகளில் அவமானப்படுத்தியாக பா.ஜ.க குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையில், `இந்தியாவை எதிர்க்கும் நிரந்தரமான கருவியாகவே ராகுல் காந்தி மாறிவிட்டார்’ என பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இப்படியிருக்க இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், `ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என பா.ஜ.க எம்.பி-க்கள் கூச்சலிட, காங்கிரஸ் எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து 20-ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, `ஆங்கிலேயர்களுக்கு வேலைசெய்தவர்கள் எங்களைத் தேசவிரோதிகள் என்பதா...' என பா.ஜ.க-வைச் சாடியிருக்கிறார்.

நாடாளுமன்றக் கூட்டத்துக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ``அவர்கள்தான் தேசவிரோதிகள். ஒருபோதும் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதில்லை. ஆங்கிலேயர்களுக்கு வேலைசெய்த அவர்கள், மற்றவர்களைத் தேசவிரோதிகள் என்பதா... வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்றவற்றிலிருந்து திசை திருப்பவே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

நட்டாவின் கருத்தை நான் கண்டிக்கிறேன். மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நாடாளுமன்றத்தில் தக்க பதிலடி தருவோம்.

அதோடு, ராகுல் காந்தியே இதற்கு பதிலளிப்பார், அதனால்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். இல்லையென்றால் ஏன் அவருக்கு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பளிக்கவில்லை.

மோடி, நட்டா
மோடி, நட்டா

பிரதமர் மோடிகூட, `நான் என்ன பாவம் செய்தேனோ இந்தியாவில் பிறந்துவிட்டேன் என மக்களும், தொழிலதிபர்களும் கூறுகிறார்கள்' என ஆறேழு நாடுகளில் கூறியிருக்கிறார். இப்படி நாட்டு மக்களை அவமதித்த அவர், எங்களை தேசவிரோதி என்பதா... முதலில் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று கூறினார்.