Published:Updated:

எடப்பாடியுடன் கடுப்பு... தி.மு.க-வுக்கு நெருக்குதல்... - அசராத பி.ஜே.பி!

modi
modi

இந்தச் செய்தியைப் பரப்பி தன்னிடம் உள்ள நிர்வாகிகளை அ.தி.மு.க பக்கம் கொண்டு போகிறார்கள் என்று தினகரன் கடுப்பில் இருக்கிறாராம்.

''எடப்பாடி ஜித்தனிலும் ஜித்தனாக இருக்கிறார். விக்கிரவாண்டி, நாங்குநேரி இரண்டு தொகுதிகளிலும் தங்களை எதற்கும் கலந்தாலோசிக்கவில்லை என்று தமிழக பி.ஜே.பி உள்ளுக்குள் குமுறிவந்தது. அதைப் பற்றி டெல்லி தலைமையிடமும் தெரிவித்திருந்தனர். எடப்பாடி ஒரு மாஸ்டர் பிளான் போட்டு செப்டம்பர் 30-ம் தேதி சென்னைக்கு வந்த மோடியை மொத்த அமைச்சரவையையும் கூட்டிக்கொண்டு போய் வரவேற்பு கொடுத்து அசத்திவிட்டார். அத்துடன் விடவில்லை... மோடியிடம் நைஸாக, 'இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க-வுக்கு உங்கள் ஆதரவு தேவை' என்று கோரிக்கையும் வைத்துவிட்டார்.''

'ஆனால், இதற்கு மோடி எந்தப் பதிலையும் நேரடியாகத் தரவில்லை. பி.ஜே.பி-யின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதரராவிடம் பேசும்படி சொல்லி ஒதுங்கிக் கொண்டார் மோடி. பிறகு, முரளிதர ராவை போனில் பிடித்த எடப்பாடி விஷயத்தைச் சொல்ல, 'அமித் ஷாவிடம் கேட்டுச் சொல்கிறேன்' என்று நழுவிவிட்டாராம் ராவ். அவர் போனை வைத்ததுமே, ஓ.பி.எஸ் போன் செய்துள்ளார். அவருக்கும் அதே பதிலைத் தந்துள்ளார் ராவ். இதனால், முதல்வரும் துணை முதல்வரும் அப்செட்.

தி.மு.க-வின் இந்தப் பரப்புரை நீடித்தால், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பி.ஜே.பி அமைக்கும் கூட்டணி படுதோல்வி அடையும் என எச்சரித்துள்ளனர்

இந்த விஷயத்தில் பி.ஜே.பி இப்படி இழுவையைப் போடுவதற்கு, நாங்குநேரி தொகுதியை எதிர்பார்த்தார்கள் அல்லவா பி.ஜே.பி-யில்; அது இல்லை என்கிற கடுப்பாகக்கூட இருக்கலாம். இது இப்படியிருக்க, கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையில் எடப்பாடி இறங்கிவிட்டார். அவருடைய ஒரே இலக்கு, இப்போது சசிகலாவை சிறையிலிருந்து வெளியே கொண்டுவருவதுதான் என்கின்றனர்.

இதனால் தினகரன் கடுப்பாவது உண்மைதான். சசிகலா தரப்பில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள சீராய்வு மனு விசாரணைக்கு வரும்போது, தமிழக அரசு எந்த வகையில் அதற்கு உதவ முடியும் என்று மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் எடப்பாடி சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளாராம். ஏற்கெனவே சுப்பிரமணியன் சுவாமி ஒருபுறம் சசிகலாவின் விடுதலைக்கு முயன்றுவருகிறார்.

அடுத்த ஆண்டு மே மாதம் வரையே சசிகலா அதிகபட்சம் சிறையில் இருப்பார் என்கின்றனர். ஆனால், தமிழக உளவுத் துறையினர் சசிகலா - எடப்பாடி இடையே இப்போதே இணக்கமான உறவு இருப்பதாகத் தொடர்ந்து செய்திகளைக் கசியவிட்டு வருவதால், தினகரன் அப்செட்டில் இருக்கிறார். இந்தச் செய்தியைப் பரப்பி தன்னிடம் உள்ள நிர்வாகிகளை அ.தி.மு.க பக்கம் கொண்டு போகிறார்கள் என்று தினகரன் கடுப்பில் இருக்கிறாராம்.

Stalin
Stalin

இதனிடையே, ஸ்டாலினை பா.ஜ.க நெருக்குவதாகக் கேள்விப்பட்டது உண்மைதான்... தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பிவருவதால், மத்திய அரசு ஏற்கெனவே தி.மு.க மீது கடுப்பில் இருக்கிறது. தி.மு.க-வின் இந்தப் பரப்புரை நீடித்தால், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பி.ஜே.பி அமைக்கும் கூட்டணி படுதோல்வி அடையும் என எச்சரித்துள்ளனர் தமிழக பி.ஜே.பி தரப்பினர். இதையடுத்து, முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் நிற்காமல் தடுக்க, சில சட்டச்சிக்கல்களை ஏற்படுத்தும் வேலைகளிலும் பி.ஜே.பி தரப்பு இறங்கியுள்ளதாம்.

- அதற்கு என்ன செய்யப்போகிறார்களாம்? > ஜூனியர் விகடன் கழுகார் பகுதியில் முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: பயங்கரவாத ஆதரவு... ஸ்டாலினை குறிவைக்கும் பா.ஜ.க! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-stalin

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |

அடுத்த கட்டுரைக்கு