Published:Updated:

`பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கல்தா?'... கன்னியாகுமரிக்குப் புதிய வேட்பாளர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பொன்.ராதாகிருஷ்ணன், ஜெகதீஸ பாண்டியன்
பொன்.ராதாகிருஷ்ணன், ஜெகதீஸ பாண்டியன்

`கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சீட் மறுக்கப்படலாம்’ என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கன்னியாகுமரி எம்.பி-யாக இருந்த வசந்தகுமார், உடல்நலக்குறைவால் ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, புதிய எம்.பி தேர்வு செய்யப்பட வேண்டும். `காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடலாம்’ எனப் பேசப்படும் நிலையில், பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிட, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முயன்றுவருகிறார். ஆனால், புதியவர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க டெல்லி முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

இது குறித்து பா.ஜ.க-வின் டெல்லி தலைமையிடத் தலைவர் ஒருவரிடம் பேசினோம்.``தமிழக பா.ஜ.க-வின் தலைமையகமான கமலாலயத்தில் `பொன்னாரு’க்கென தனியறை இருந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு பொன்னார் தோல்வியுற்றார். இதைத் தொடர்ந்து, கட்சியில் அவருக்குப் பொறுப்பு இல்லாததைச் சுட்டிக்காட்டி, அவர் அறையை காலி செய்யவைத்தது மாநிலத் தலைமை. டெல்லி தலைவர்களிடம் பொன்னார் முறையிட்டும் எந்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸும் இல்லை. அவருக்கு எதிராகத் தமிழகத் தலைவர்கள் சிலரே டெல்லியில் லாபி செய்கின்றனர். இம்முறை, அவருக்கு சீட் வழங்க வேண்டாம் என அந்த லாபி கடுமையாக டெல்லியில் முட்டி மோதுகிறது. கட்சிக்குள்ளேயே பொன்னாருக்கு எதிரான மனநிலை இருப்பதால், அவருக்கு இம்முறை சீட் வழங்க வேண்டாம் என டெல்லியும் முடிவெடுத்திருக்கிறது.

`ரஜினி டிவி' சலசலப்பு, வாணிஶ்ரீ சொத்து விவகாரம், `விரக்தி' பொன்னார்... கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்!

தற்போது ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத் தலைவராக இருக்கும் ஜெகதீஸ பாண்டியன், பா.ஜ.க வேட்பாளராகக் கன்னியாகுமரியில் களமிறங்கக்கூடும். பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவரான இவர், குஜராத் மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பதவிவகித்தவர். 1981 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜெகதீஸ பாண்டியன், 2015-ல் குஜராத்தில் நடைபெற்ற `வைப்ரண்ட் குஜராத்’ உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, மோடியின் மனதில் இடம்பிடித்தவர். நிதித்துறையிலும், எரிசக்திதுறையிலும் நீண்ட அனுபவம் இருப்பதால்தான், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் அவரை துணைத் தலைவராக நியமிக்க பிரதமரே மற்ற உறுப்பு நாடுகளிடம் பரிந்துரைத்தார். ராமநாதபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெகதீஸ பாண்டியன், கிறிஸ்தவ நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் இவருக்கு வாய்ப்பளித்து, வெற்றி பெற்றவுடன் மத்திய அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளும் திட்டமும் டெல்லியில் இருக்கிறது.

ஜெகதீஸ பாண்டியனுடன் மோடி
ஜெகதீஸ பாண்டியனுடன் மோடி

பா.ஜ.க தேசிய மகளிரணி பொதுச்செயலாளர் விக்டோரியா கௌரியும் வேட்பாளராகக் களமிறங்கக் காய்நகர்த்துகிறார். இவரை சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் உறுப்பினராக நியமிப்பதற்கு பொன்னாரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பிரதமர் உத்தரவின் பேரில், உறுப்பினர் பொறுப்பை நிதின் கட்கரி வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவரான தர்மராஜும் வேட்பாளராகக் களமிறங்குவதற்குக் காய்நகர்த்துகிறார்.

குமரி: துண்டுப்பிரசுரம் விநியோகித்த பொன்.ராதாகிருஷ்ணன்! - இடைத்தேர்தலுக்கு ஆயத்தமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாளுக்கு நாள் பொன்னாருக்கு நிலைமை சிக்கலாகிறது. தன்னுடைய பராக்கிரமத்தைப் பயன்படுத்தி, டெல்லியை ரீச் செய்தால் மட்டுமே அவருக்கு மீண்டும் சீட் வழங்கப்படும். இல்லையென்றால், இம்முறை புதியவருக்கு சான்ஸ் அடிக்கலாம்!” என்றார்.

விக்டோரியா கௌரி, தர்மராஜ்
விக்டோரியா கௌரி, தர்மராஜ்

ஏற்கெனவே,`கன்னியாகுமரி தொகுதியில் நான் போட்டியிடத் தயார்’ என்று குண்டை வீசி பொன்னாரின் இதயத்தைத் தாக்கினார் பா.ஜ.க துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன். அந்தக் காயம் ஆறுவதற்குள், `மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தினால் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கத் தயார்’ என கன்னியாகுமரி மாவட்ட மீனவ சமூதாயத்தினர் தீர்மானமே போட்டு அடுத்த குண்டை வீசினர். இப்படி, கன்னியாகுமரி தொகுதி பொன்னாரின் கையைவிட்டுப் போய்க்கொண்டேயிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு