Published:Updated:

கங்குலி மனைவியை ராஜ்ய சபா உறுப்பினராக்கும் திட்டத்தில் பாஜக?!

கங்குலி - அவர் மனைவி டோனா

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவ்ரவ் கங்குலியின் மனைவியை ராஜ்ய சபா உறுப்பினராக்க பாஜக விருப்பம் தெரிவித்துள்ளது.

கங்குலி மனைவியை ராஜ்ய சபா உறுப்பினராக்கும் திட்டத்தில் பாஜக?!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவ்ரவ் கங்குலியின் மனைவியை ராஜ்ய சபா உறுப்பினராக்க பாஜக விருப்பம் தெரிவித்துள்ளது.

Published:Updated:
கங்குலி - அவர் மனைவி டோனா

இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் சவ்ரவ் கங்குலி இரண்டு நாள்களுக்கு முன்பு மேற்கு வங்கம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சிறப்பு விருந்து கொடுத்து கௌரவித்தார். அமித் ஷா மகன் கிரிக்கெட் போர்டு செயலாளராக இருக்கிறார். கங்குலி வைத்த விருந்தில் ஸ்வபன் தாஸ்குப்தா, மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார், எதிர்க்கட்சித் தலைவர் சுவந்து ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த விருந்து உபசரிப்பால் அமித் ஷா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

அன்றைய தினம் மாலை விக்டோரியா நினைவகத்தில் நடந்த கலைநிகழ்ச்சியில் கங்குலி மனைவி டோனா கங்குலி கலந்துகொண்டு நடன நிகழ்ச்சியை நடத்தினார். இதில் அமித் ஷாவும் கலந்துகொண்டு நடனத்தைக் கண்டு ரசித்தார். கங்குலி மனைவி டோனா ஒரு சிறந்த ஒடிசி நடனக்கலைஞர்.

அமித் ஷா
அமித் ஷா

இதஏகிடையே, அவரை ராஜ்ய சபா உறுப்பினராக்குவது குறித்து அமித் ஷா பரிசீலித்துவருவதாக ஒரு கருத்து நிலவுகிறது. விரைவில் தாஸ் குப்தா, நடிகை ரூபா கங்குலி ஆகியோரின் ராஜ்ய சபா உறுப்பினர் பதவி காலியாகிறது. இந்தப் பதவிகள் ஜனாதிபதியின் நியமனப் பதவிகள்.

எனவே, அந்த இடத்துக்கு கங்குலியின் மனைவியை நியமிக்க அமித் ஷா விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திக்கு கங்குலியின் குடும்பம் மறுப்பு தெரிவிக்கவோ அல்லது ஆதரவு தெரிவிக்கவோ இல்லை. இது குறித்து மாநில பாஜக முன்னாள் தலைவர் திலிப் கோஷ் கூறுகையில், ``டோனா கங்குலி போன்ற ஒருவர் மேற்கு வங்கத்திலிருந்து ராஜ்ய சபாவுக்குச் சென்றால் எங்களுக்கு மகிழ்ச்சியே” என்று தெரிவித்தார்.

தற்போதைய மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தாரும், ``டோனா கங்குலி ராஜ்ய சபா உறுப்பினரானால் எங்களுக்கு மகிழ்ச்சி” என்று தெரிவித்தார். அமித் ஷாவுக்கு விருந்து கொடுத்த அடுத்த நாளே மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனக்கு மிகவும் நெருக்கம் என்று கங்குலி பேட்டி கொடுத்து, மம்தாவின் கோபத்திலிருந்தும் தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism