Published:Updated:

"பாஜக சட்டசபையை மாசுபடுத்தியிருக்கிறது; கோமியம்கொண்டு சுத்தம் செய்வோம்" – கர்நாடக காங்கிரஸ்

காங்கிரஸ் மாநிலத் தலைவர் சிவக்குமார்.

`சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், 35,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருக்கிறது’ என பா.ஜ.க சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

"பாஜக சட்டசபையை மாசுபடுத்தியிருக்கிறது; கோமியம்கொண்டு சுத்தம் செய்வோம்" – கர்நாடக காங்கிரஸ்

`சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், 35,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருக்கிறது’ என பா.ஜ.க சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
காங்கிரஸ் மாநிலத் தலைவர் சிவக்குமார்.

கர்நாடக மாநிலத்தில், இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால், ஆளும் பா.ஜ.க-வினர் முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி குறித்தும், அவர்களின் ஊழல்களை பட்டியலிட்டும், வாக்கு சேகரித்துவருகின்றனர். இதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சியினர், பா.ஜ.க-வின் ஊழல்கள் குறித்து பேசிவருவதால் தினமும் தலைவர்களுக்குள் வார்த்தைப்போர் வெடித்துவருகிறது.

இந்த நிலையில், `சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, 35,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருக்கிறது’ என பா.ஜ.க சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய, கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார், ‘‘மூன்றரை ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பா.ஜ.க-வினர் ஏன், இந்தக் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்கவில்லை... காங்கிரஸ் மீது பா.ஜ.க சொல்லும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் ஆதாரமற்றவை.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் சிவக்குமார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் சிவக்குமார்.

40 சதவிகித ஊழலின் பிராண்டுதான் பா.ஜ.க. இன்னும் 45 நாள்களுக்குள் அவர்கள் தங்கள் கூடாரத்தைக் காலிசெய்வார்கள். அவர்களின் மோசமான ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருக்கின்றனர். ஊழல் ஆட்சிசெய்து பா.ஜ.க-வினர் சட்டசபையை மாசுபடுத்தியிருக்கின்றனர். அதை நாங்கள் கோமியம்கொண்டு சுத்தம் செய்வோம்.

மேலும், பா.ஜ.க கடலோர கர்நாடகப் பகுதிகளில் மதக்கலவரங்களை ஏற்படுத்திவருகிறது. இதனால்தான் அங்கு பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுவருகின்றனர்’’ எனக் காட்டமாகத் தெரிவித்தார். இவருடைய இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க-வினர் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்துவருகின்றனர்.