Published:Updated:

ராகுலிடம் விசாரணை: ``அவர்கள் இப்படி நடத்தப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!" - சசி தரூர்

காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

``காங்கிரஸின் போராட்டங்களை இவ்வாறு இரக்கமின்றி அடக்குவதென்பது ஜனநாயகத்தின் மீதான கறை" - காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

ராகுலிடம் விசாரணை: ``அவர்கள் இப்படி நடத்தப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!" - சசி தரூர்

``காங்கிரஸின் போராட்டங்களை இவ்வாறு இரக்கமின்றி அடக்குவதென்பது ஜனநாயகத்தின் மீதான கறை" - காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

Published:Updated:
காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் இரண்டு நாள்களாக டெல்லியில் விசாரணைக்கு நேரில் ஆஜரான காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மூன்றாவது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜரானார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத்துறையின் இந்த விசாரணையை எதிர்த்து போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும், போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, போலீஸாரும் போராட்டக்காரர்களைக் கைதுசெய்துவருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், காங்கிரஸ்காரர்கள் மீதான போலீஸாரின் இத்தகைய நடவடிக்கை குறித்து மத்திய அரசை ட்விட்டரில் விமர்சனம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``தீங்கிழைக்கும் வழக்கின் மூலம் ஒரு தலைவரின் குரலை ஒடுக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த, அந்தக் கட்சியினருக்கு உரிமையிருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. காங்கிரஸின் போராட்டங்களை இவ்வாறு இரக்கமின்றி அடக்குவதென்பது ஜனநாயகத்தின் மீதான கறை. அதுமட்டுமல்லாமல், அவர்கள் இப்படி நடத்தப்படவில்லை என்பதையும் ஆளுங்கட்சி நினைவில்கொள்ள வேண்டும்" என பா.ஜ.க-வை மறைமுகமாகக் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism