Published:Updated:

``வங்காளிகளுக்கு காளியை எப்படி வழிபட வேண்டுமென பாஜக அறிவுறுத்தக்கூடாது!" - மஹுவா மொய்த்ரா

மஹுவா மொய்த்ரா

``காளி தேவியின் பூஜையை நடத்துவது எப்படி என்பதை எங்களுக்குக் கற்றுக்கொடுக்க பா.ஜ.க யார்? பா.ஜ.க என்ன இந்து தர்மத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளதா?" - மஹுவா மொய்த்ரா

``வங்காளிகளுக்கு காளியை எப்படி வழிபட வேண்டுமென பாஜக அறிவுறுத்தக்கூடாது!" - மஹுவா மொய்த்ரா

``காளி தேவியின் பூஜையை நடத்துவது எப்படி என்பதை எங்களுக்குக் கற்றுக்கொடுக்க பா.ஜ.க யார்? பா.ஜ.க என்ன இந்து தர்மத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளதா?" - மஹுவா மொய்த்ரா

Published:Updated:
மஹுவா மொய்த்ரா

சமீபத்தில் வெளியான, இயக்குநர் லீனா மணிமேகலையின் `நிகழ்த்துக்கலை ஆவணப்படமான காளி படத்தின் போஸ்டருக்கு, பா.ஜ.க மற்றும் இந்துத்துவா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மஹுவா மொய்த்ரா, ``என்னைப் பொறுத்தவரை இறைச்சி உண்ணும், மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் காளி" எனக் கூறியிருந்தார். அதையடுத்து, மஹுவா மொய்த்ராவை கைதுசெய்ய வேண்டும் என மேற்கு வங்க பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினார்கள்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக மொய்த்ராவும், ``என்மீது பா.ஜ.க விரும்பினால் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யட்டும். நாட்டிலுள்ள ஒவ்வொரு நீதிமன்றத்திலும் உங்களைச் சந்திக்கிறேன்" என ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது, ``காளியை எப்படி வழிபட வேண்டும் என்பதை பா.ஜ.க கற்றுக் கொடுக்கக் கூடாது" என சாடியிருக்கிறார்.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

பெங்காலி ஊடகத்தில் இந்த விவகாரம் குறித்துப் பேசிய மொய்த்ரா, ``காளி தேவியின் பூஜையை நடத்துவது எப்படி என்பதை எங்களுக்குக் கற்றுக்கொடுக்க பா.ஜ.க யார்? பா.ஜ.க என்ன இந்து தர்மத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளதா? காளி பக்தையாக இருந்ததால், காளியை எப்படி வழிபட வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாஜக
பாஜக

கடந்த 2,000 வருடங்களாக நாங்கள் அதே வழியில்தான் அம்மனை வழிபட்டு வருகிறோம். எனவே காளியை எப்படி வழிபட வேண்டுமென்பதை பா.ஜ.க எங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டாம்" என்றார்.