Published:Updated:

``அமலாக்கத்துறை சோனியா காந்தியை அச்சுறுத்த முடியுமா..?!" - காங்கிரஸின் டீவீட்டுக்கு பாஜக பதில்

சோனியா காந்தி ( ட்விட்டர் )

``உலக வரலாற்றையே மாற்றிய குடும்ப பின்னணியைக் கொண்ட சோனியா கந்தியை அமலாக்கத்துறை அச்சுறுத்த முடியுமா?" - காங்கிரஸ்

``அமலாக்கத்துறை சோனியா காந்தியை அச்சுறுத்த முடியுமா..?!" - காங்கிரஸின் டீவீட்டுக்கு பாஜக பதில்

``உலக வரலாற்றையே மாற்றிய குடும்ப பின்னணியைக் கொண்ட சோனியா கந்தியை அமலாக்கத்துறை அச்சுறுத்த முடியுமா?" - காங்கிரஸ்

Published:Updated:
சோனியா காந்தி ( ட்விட்டர் )

நேஷ்னல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். ஆரம்பத்திலிருந்தே அமலாக்கப் பிரிவை மத்திய பா.ஜ.க அரசு பழிவாங்கும் நடவடிக்கைக்காகப் பயன்படுத்துகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டிவருகிறது. சோனியா இன்று விசாரணைக்கு ஆஜராவதை முன்னிட்டு, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் காங்கிரஸ் அவசரக்கூட்டம் நடந்தது. அதில் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவது எனத் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் போராட்டம்
காங்கிரஸ் போராட்டம்
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து இன்று தொண்டர்கள், மகளிர் அணியினர் என காங்கிரஸின் அனைத்து அமைப்பினரும் அதிகாலை முதலே டெல்லியின் காங்கிரஸ் அலுவலகத்தில் திரண்டனர். அங்கிருந்து கோஷமிட்டுக்கொண்டே புறப்பட்டு அமலாக்கப் பிரிவு அலுவலகம் சென்றனர். இதனால் அந்த அலுவலகம் அமைந்திருக்கும் அக்பர் சாலையில் பதற்றமான சூழல் நிலவியது. போலீஸார் தடுப்புகள் அமைத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காகக் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ``உலக வரலாற்றையே மாற்றிய குடும்ப பின்னணியைக் கொண்ட சோனியா காந்தியை அமலாக்கத்துறை அச்சுறுத்த முடியுமா?" எனப் பதிவிட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரவிசங்கர் பிரசாந்த்
ரவிசங்கர் பிரசாந்த்
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து காங்கிரஸுக்கு பதிலளிக்கும் வகையில், காந்தி குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான "துராக்ரா" (பிடிவாதமான கோரிக்கை) போராட்டாம் என பா.ஜ.க விமர்சித்திருக்கிறது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ``நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான எப்.ஐ.ஆரை ரத்துசெய்ய வேண்டும் என்ற காங்கிரஸாரின் மனு, உச்ச நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களாலும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸார் விசாரணைக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இது `சத்யாகிரக' போராட்டம் அல்ல, இந்திய நாடு, அதன் சட்டங்கள் மற்றும் அதன் அமைப்புகளுக்கு எதிரான `துராக்ரா' போராட்டம். காங்கிரஸ் இப்போது ஒரு குடும்பத்தின் பாக்கெட் அமைப்பாக மாறிவிட்டது, இப்போது அதன் சொத்துகளும் அந்த குடும்பத்தால் பாக்கெட் செய்யப்படுகின்றன" எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.