Published:Updated:

"பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தித்தான் வைக்க வேண்டும்!"- நாராயணன் திருப்பதி

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

"பருவநிலை மாற்றத்தின் தாக்கம், புவி வெப்பமயமாதலைத் தடுக்கத்தான் விலையேற்றம். பூமியை பாதுகாக்கத்தான் மோடி பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வைத்திருக்கிறார். அந்த வகையில் மோடியின் தொலைநோக்கு சிந்தனை விஞ்ஞான பூர்வமானது மட்டுமல்ல எதிர்காலத்துக்குமானது!''

பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கொஞ்சம் வித்தியாசமான ஆள். என்ன கேள்வி கேட்டாலும் பதில் வைத்திருக்கிறார். "அரசியலில் என்னவாகவேண்டும் என்ற ஆசை?" என்று கேட்ட அடுத்த நொடி 'பிரதமாக வேண்டும்!' எனப் பதில் சொல்கிறார்.

"ஏன் சார் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க மாட்டீங்குறீங்க?" என்று கேட்டால், "பெட்ரோல், டீசல் விலை இனி இறங்கவே வாய்ப்பில்லை தெரியுமா?" என பொளேர் எதிர்கேள்வி கேட்கிறார்.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியுடன் ஓர் உரையாடல்
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியுடன் ஓர் உரையாடல்

"அவ்வளவு ஏன் அப்படி விலையை உயர்த்தி வைப்பதற்கும் புவி வெப்பமயமாக்கலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு தெரியுமா?" என புதிதாய் திகில் கிளப்புகிறார்... "பருவநிலை மாற்றத்தின் தாக்கம், புவி வெப்பமயமாதலைத் தடுக்கத்தான் விலையேற்றம். கூடவே பால் தரும் மாடுகள் உமிழும் மீத்தேன் வாயு, மின்சாரத்துக்காகப் பயன்படும் நிலக்கரியின் பயன்பாடும் தான்மனித குல விரோதி. பூமியை பாதுகாக்கத்தான் மோடி பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வைத்திருக்கிறார். அந்த வகையில் மோடியின் தொலைநோக்கு சிந்தனை விஞ்ஞான பூர்வமானது மட்டுமல்ல எதிர்காலத்துக்குமானது!'' என்கிறார். அம்மாடியோவ் என நமக்கு தலைசுற்றுகிறது.

தமிழக அரசுக்கும் மோடி அரசுக்கும் மதிப்பெண் கொடுங்க என்றதும் மைனஸில் தி.மு.க அரசுக்கும் ப்ளஸ்ஸில் மோடி அரசுக்கும் மார்க் கொடுக்கிறார். "25 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்கிறார் மோடி! தடுப்பூசி விஷயத்தில் இமாலய சாதனை செய்தவர் மோடி. தடுப்பூசி போட்டால் மரணம்னு வதந்தி பரவுன ஆரம்ப கட்டத்துலேயே முன்மாதிரியாக முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட தலைவர் மோடி!" என்று மோடி புகழ் பாடுகிறார்.

ஸ்வச் பாரத் திட்டத்தைப் பற்றிய கேள்விக்குத் தமிழகம் முன்னோடி எனச் சொல்லி நழுவுகிறார். "தமிழகத்தை மட்டும் வைத்து எடைபோடக்கூடாது. காரணம் தமிழ்நாடு கழிப்பிட வசதியில் ஏற்கெனவே முன்னோடி மாநிலம்! ஆனாலும் தமிழக அரசுக்கு மைனஸில்தான் மார்க் கொடுக்க முடியும்.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

வெள்ளை அறிக்கையில் தெளிவே இல்லை. தமிழக அரசிடம் நிதிநிலைக்கான திட்டமே இல்லை. தமிழ்நாடு அரசிடம் நிதிமேலாண்மை இல்லை. மூலதனம் சொல்லப்படவில்லை'' என்று பல இல்லைகளை அடுக்கி தி.மு.க-வை காய்ச்சி எடுக்கிறார்.

கடைசியாக கேடி ராகவனின் வீடியோ மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஸ்டிங் ஆபரேஷனில் பேசிய கருத்துகள் பற்றியும் கட்சியின் கொள்கைக் குன்றாமல் பிடிகொடுக்காமல் பேசியிருக்கிறார்.

எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் லாகவம் வியக்க வைப்பதோடு சில விளக்கங்கள் உண்மையில் நம் தலையை கிறுகிறுக்க வைக்கிறது.

முழுமையான வீடியோ பார்க்க கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யவும்...