Published:Updated:

``சோனியா, ராகுல் உட்பட பலரும் மோடியைப் பலமுறை அவமதித்திருக்கின்றனர்" - காங்கிரஸுக்கு பாஜக பதிலடி

சோனியா காந்தி - மோடி

``தங்கள் கட்சியின் உயர்மட்ட தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பல நிர்வாகிகள் மோடியை மீண்டும் மீண்டும் பலமுறை அவமதித்திருக்கின்றனர்." - பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா

``சோனியா, ராகுல் உட்பட பலரும் மோடியைப் பலமுறை அவமதித்திருக்கின்றனர்" - காங்கிரஸுக்கு பாஜக பதிலடி

``தங்கள் கட்சியின் உயர்மட்ட தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பல நிர்வாகிகள் மோடியை மீண்டும் மீண்டும் பலமுறை அவமதித்திருக்கின்றனர்." - பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா

Published:Updated:
சோனியா காந்தி - மோடி

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா, சோனியா காந்திக்கு எதிராக அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜே.பி.நட்டாவுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் ஜெய்ராம் ரமேஷின் இத்தகைய செயலுக்கு பதில் தரும்விதமாக, காங்கிரஸ் தலைவர்களைக் குற்றம்சாட்டி ஜெய்ராம் ரமேஷுக்கு பிரேம் சுக்லா நேற்று கடிதம் எழுதியிருக்கிறார்.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா

அதில், ``தங்கள் கட்சியின் உயர்மட்ட தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பல நிர்வாகிகள் மோடியை மீண்டும் மீண்டும் பலமுறை அவமதித்திருக்கின்றனர். அனைவரின் நலனுக்காக உழைக்கும் எங்கள் பிரதமரை நீங்கள் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள்" என பிரேம் சுக்லா குறிப்பிட்டிருந்தார். ஜெய்ராம் ரமேஷ் முன்னதாக ஜே.பி.நட்டாவுக்கு எழுதியிருந்த கடிதத்தில், ``சோனியா காந்திக்கு எதிராக, உங்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா பயன்படுத்திய துஷ்பிரயோகமான மற்றும் அநாகரிகமான வார்த்தைகளுக்கு காங்கிரஸ் தனது கடுமையான ஆட்சேபனையைப் பதிவுசெய்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

உங்கள் கட்சித் தலைவர்களின் வெட்கக்கேடான மற்றும் அநாகரிகமான பேச்சுக்காக நாட்டுப் பெண்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதே பிரதமர் மோடிக்கும், உங்களுக்குமான எங்களின் வேண்டுகோள். எங்கள் தலைவர் அல்லது வேறு எந்தத் தலைவருக்கு எதிராக தகாத வார்த்தைகளைத் திரும்பத் திரும்பப் பேசுவது, அவதூறு வழக்கு போன்ற சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்க எங்களைக் கட்டாயப்படுத்தும்" என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.