Published:Updated:

`இன்னொரு தலைவரைத் தவறாகப் பேசுவது எங்கள் டி.என்.ஏ-வில் கிடையாது!' - கோவையில் அண்ணாமலை

``அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக மாதம் ஒரு முன்னாள் அமைச்சர் வீடுகளில் ரெய்டு நடத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம். உண்மையான சமூகநீதிக் காவலர் பிரதமர் மோடிதான்’’ என்கிறார் அண்ணாமலை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இதையடுத்து, காந்திபுரம் பகுதியிலுள்ள பாஜக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

அண்ணாமலை
அண்ணாமலை
"ஸ்டாலின் தாடி வைக்காத பெரியார்"| ஒரு லட்சம் விநாயகர் சிலை வைப்போம் - பாஜக அண்ணாமலை| Quicklook

கடந்த சட்டசபைத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட ஷாஜஹான் உள்ளிட்ட பலர் பாஜக-வில் இணைந்தனர். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அண்ணாமலை கூறுகையில், ``கோவை காவல்துறை பிரதமர் மோடியின் பிறந்தநாள் போஸ்டரைக் கிழித்து, கொடிக் கம்பங்களை அகற்றியிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. கோவையில் காவல்துறை திமுக-வின் கூலிப்படையாக இருக்கிறது. அவர்களைவைத்து ஏவ முடியும் என தப்புக் கணக்கு போடுகின்றனர்.

அண்ணாமலை
அண்ணாமலை

நீட் தேர்வுக்காக மாணவர்கள் உயிரிழக்கும்போது சமுதாயத்தில் தவறான அபிப்ராயத்தை விதைக்கிறது. உயிரிழக்கும் மாணவர்களின் துயரத்தில் நாங்களும் இருக்கிறோம். 2019, 2020-ம் ஆண்டு நீட் தேர்வுக்காக யாரும் தற்கொலை செய்யவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2021-ம் ஆண்டு மாணவர்கள் எதற்காகத் தற்கொலை செய்துள்ளனர்? `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் சட்டசபை கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வை எடுத்துவிடுவோம். மாணவர்கள் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். தேர்வு நடக்காது. படிக்க வேண்டாம்’ என திமுக தலைவர்கள் பல இடங்களில் பேசியிருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு திமுக படிப்படியாகக் கருத்தை மாற்றியது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட் தேர்வு நடந்தும்விட்டது. பொறுப்பான தலைவர்கள் பேச்சும் பேச்சசா இது... இன்னும் எதற்காக பொய் பேசிக் கொண்டிருக்கின்றனர்? எந்தவிதத்தில் பார்த்தாலும் நீட் தேர்வு சமூகநீதியை நிலைநாட்டும். திமுக இதைவைத்து அரசியல் செய்கிறது.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., 6,10,12 என அனைத்து வகுப்பு தேர்வுகளிலும் முறைகேடு நடக்கிறது. இதைச் சமுதாயமாக நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும். எந்தத் தேர்வில் முறைகேடு நடந்தாலும் கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் தற்கொலைக்கு திமுக பொறுப்பேற்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி சுமுகமாகச் செல்கிறது.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

எங்கள் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை. ஆளுநர் முதல் செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அற்புதமாகப் பேசியிருக்கிறார். அரசியல், நிர்வாக அனுபவத்துடன் வந்திருக்கிறார். அது மக்களுக்குக் கைகொடுக்கும்.

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று பல இடங்களில் கூறியிருக்கிறோம். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அதைத்தான் கூறினார்கள். `உறவினர் பொண்ணுக்கு வளைகாப்பு. அதனால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குச் செல்லவில்லை’ என்று நிதியமைச்சர் சொல்கிறார்.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

ஒரு நிதியமைச்சர் சொல்லும் பதிலைப் பாருங்கள். இப்போது பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதிலேயே திமுக-வின் இரட்டை வேடம் மக்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

திமுக பேசுவது ஒன்று, செய்வது ஒன்றாக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை ஒரே தேதியில் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதில் எந்தத் தவறும் இல்லை. ஊரடங்கின் எந்தக் கட்டுப்பாட்டையும் பாஜக மீறவில்லை. மோடியின் கட்அவுட்டுக்கு நாங்கள் எங்கேயும் பால் ஊற்றவில்லை.

ரெய்டு
ரெய்டு

மாறாக, மக்களுக்குச் சேவை செய்துவருகிறோம். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், வீரமணி சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்படும் ரெய்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியாகத்தான் தெரிகிறது. தேர்தலுக்கு முன்பு கூறியதைத்தான், இப்போதும் சொல்கின்றனர்.

நேர்மையான முறையில் விசாரணை நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் நிரபராதிகளாக வருவார்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக மாதம் ஒரு முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம். உண்மையான சமூகநீதிக் காவலர் பிரதமர் மோடிதான்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

அதேநேரத்தில் இன்னொரு தலைவரைத் தவறாகப் பேசுவது எங்கள் டி.என்.ஏ-வில் கிடையாது. உண்மையான சமூகநீதிக் காவலர் யார் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு