Published:Updated:

``அரை வேக்காட்டுத்தனமான அறிக்கைகைளை அதிமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்" - பாஜக மாநில பொதுச் செயலாளர்

முருகானந்தம் (பாஜக)

``பா.ஜ.கவை குறைச் சொல்வதை அ.தி.மு.கவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கைகளை வெளியிடுவதை அதிமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.” - பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம்.

``அரை வேக்காட்டுத்தனமான அறிக்கைகைளை அதிமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்" - பாஜக மாநில பொதுச் செயலாளர்

``பா.ஜ.கவை குறைச் சொல்வதை அ.தி.மு.கவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கைகளை வெளியிடுவதை அதிமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.” - பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம்.

Published:Updated:
முருகானந்தம் (பாஜக)

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகைத் தந்திருந்த பா.ஜ.க-வின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார், அப்போது அவர், ``மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கடந்த 8 ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனைகள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டுச் செல்ல திட்டமிட்டுள்ளோம். இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜ.க அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட இருக்கிறோம். மத்தியில் ஆளும் பா.ஜ.க கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்திருக்கிறது.

முருகானந்தம் (பாஜக)
முருகானந்தம் (பாஜக)

இதற்கு உதாரணம் கடந்த வாரம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பாரத பிரதமர் மோடி ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டியும், பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்ததுமே சாட்சி. பா.ஜ.கவை குறைச் சொல்வதை அ.தி.மு.கவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கைகைளை வெளியிடுவதை அதிமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் 200 சி.பி.எஸ்.இ பள்ளிகள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது 1700 பள்ளிகளாக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் பாடத்திட்டங்கள் மீது மக்கள் நம்பிக்கை குறைந்து வருவதைக் காட்டுகிறது. பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவில் வாரத்திற்கு ஒரு பல்கலைகழகங்களும், கல்லூரிகளும் தொடங்கப்பட்டு வருகின்றன" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism