Published:Updated:

``இனிமேலாவது அரியலூர் மாணவியின் பெற்றோரை முதல்வர் சந்திப்பாரா?" - அண்ணாமலை கேள்வி!

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

`அரியலூர் மனைவியின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்கத் தடையில்லை. மேலும், தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தை, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம், அரியலூர் மாணவியின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. `இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்கத் தடைவிதிக்க வேண்டும்’ என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில், ``அரியலூர் மனைவியின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்கத் தடையில்லை. மேலும், தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தை, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இது குறித்து ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். அதில், ``அரியலூர் மாணவியின் வழக்கை சி.பி.ஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பா.ஜ.க-வின் நிலைப்பாடு மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. இதுவரை பொய்களைப் பரப்பிவந்த தி.மு.க அரசு அனைவரிடமும் மன்னிப்பு கேட்குமா... இனிமேலாவது மாணவியின் பெற்றோரை முதல்வர் சந்திப்பாரா?" என அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism