Published:Updated:

``மேக்கேதாட்டூ அணை கட்ட தமிழ்நாடு பாஜக ஒருபோதும் அனுமதிக்காது!" - அண்ணாமலை

அண்ணாமலை

`எந்த காரணத்திலும் மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு பா.ஜ.க., ஆதரவு அளிக்காது. இதற்கு தமிழ்நாடு அரசுக்கு பா.ஜ.க., முழு ஒத்துழைப்பு அளிக்கும்.' - அண்ணாமலை

``மேக்கேதாட்டூ அணை கட்ட தமிழ்நாடு பாஜக ஒருபோதும் அனுமதிக்காது!" - அண்ணாமலை

`எந்த காரணத்திலும் மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு பா.ஜ.க., ஆதரவு அளிக்காது. இதற்கு தமிழ்நாடு அரசுக்கு பா.ஜ.க., முழு ஒத்துழைப்பு அளிக்கும்.' - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

சேலம் ஏற்காடு, நாகலூர் கிராமத்தில் பழங்குடியின மக்களைச் சந்தித்து குறைகள் கேட்டறியும் கூட்டம் பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு ஏற்காடு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது குறித்து கலந்தாலோசித்தார். மலைவாழ் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் விதமாக காபி உற்பத்தியை பெருக்கி சரியான விலையில் மக்களுக்கு லாபம் தரக்கூடிய நிறுவனங்களுக்கு விற்பதற்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``எந்த காரணத்திலும் மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு பா.ஜ.க., ஆதரவு அளிக்காது. இதற்கு தமிழ்நாடு அரசுக்கு பா.ஜ.க., முழு ஒத்துழைப்பு அளிக்கும். மேக்கேதாட்டூ அணை கட்டுவதன் மூலம் டெல்டா பகுதிகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரும். விவசாயம் அடியோடு அழிந்துபோகும். குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் அனுமதி இல்லாமல் அவர்களால் அணை கட்டமுடியாது. சட்டம் மிகவும் தெளிவாக இருக்கிறது, அதையும் தாண்டி கட்ட முயற்சித்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் எதிர்த்து நிற்போம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மத்திய அரசு மூலம் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய 6,000 ரூபாய் நிதி உதவி பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. 2019-20 ஆண்டுகளில் இதில் 145 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல்கள் நடைப்பெற்றுள்ளன. இதனை மத்திய அரசு தனிக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விரைவில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் திட்டம் நிறைவேற்றப்படும்.

தீட்சிதர், ஆதீனம் தொடர்பான பிரச்னை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. 1925-ல் தான் இந்து அறநிலைத்துறை என்பது உருவாக்கப்பட்டது. சிதம்பரம் கோயிலினை பொறுத்தவரை 1951-ல் தான் நிர்வாக அலுவலர் நியமிக்கப்படுகிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

நீதிமன்றமே 2014-ல் தீட்சிதர்கள் நடத்தக்கூடிய கோயில் அவர்களது கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது. இதில் மாநில அரசு தலையிடக்கூடாது என்று தெரிவித்துள்ளது. தற்போதைய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டத்தை மீறி செயல்படுகிறார். சமீபத்தில் மதுரை ஆதீனம்மீது அமைச்சர் சேகர் பாபு கங்கணம் கட்டிக்கொண்டு பேசுகிற வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதீனம் மதுரை துறவியர் மாநாட்டில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக எதையும் பேசவில்லை. தனது கருத்தை ஆதீனம் சொல்வதற்கே சேகர் பாபு மிரட்டும் விதமாக பேசுகிறார். ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா?" என்றார்.

அவரிடம் பா.ஜ.க., தொடர்ந்து தி.மு.க., ஊழலை மட்டும் விமர்சித்து வருகிறது அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் நடைபெறவில்லையா என்று பத்திரிகையாளர்கள் கேள்விகள் எழுப்பியதற்கு, ``தமிழ்நாட்டில் பா.ஜ.க., 2021-க்கு பிறகு எதிர்க்கட்சியாக திகழ்கிறது. 4 எம்.எல்.ஏ-க்களும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாகத்தான் இருந்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது ஆட்சியில் இருக்கக்கூடிய தி.மு.க-வின் தவறுகளை மக்கள் மன்றத்தில் கூறுவதுதான் எதிர்க்கட்சியின் வேலை. அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் நான் அரசியலில் இல்லை. நான் பொறுப்பேற்ற பிறகு கட்சி சொல்லும் பணியைத்தான் நான் செய்து வருகிறேன். குறிப்பாக தி.மு.க-வை குறைக் கூறவேண்டும் என்பதற்காக எதையுமே சொல்லவில்லை" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism