Published:Updated:

``ரூ.5 ஆயிரம் கோடியுடன் முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்ற மர்மம் என்ன?" - அண்ணாமலை கேள்வி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

`முதல்வரின் துபாய் பயணத்தையொட்டி, 5 ஆயிரம் கோடி ரூபாய் அங்கு பறந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்துவைக்க எதற்கு அவ்வளவு பணம்?' - அண்ணாமலை.

``ரூ.5 ஆயிரம் கோடியுடன் முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்ற மர்மம் என்ன?" - அண்ணாமலை கேள்வி

`முதல்வரின் துபாய் பயணத்தையொட்டி, 5 ஆயிரம் கோடி ரூபாய் அங்கு பறந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்துவைக்க எதற்கு அவ்வளவு பணம்?' - அண்ணாமலை.

Published:Updated:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

விருதுநகர், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த பட்டியல் வகுப்பு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க நிர்வாகி உட்பட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் இந்தக் குற்றச் சம்பவத்தை கண்டித்து, விருதுநகர் எம்.ஜி.ஆர் சிலை அருகே மாவட்ட பா.ஜ.க சார்பில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நீதி கேட்டும், காவல்துறையை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார். கூட்டத்தில் பா.ஜ.க மாநில மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, ``விருதுநகரில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க இதுவரை அமைதியாக இருந்துவிட்டு, நாங்கள் போராட்டம் என அறிவித்த பிறகு தற்போது களத்துக்குள் வருகிறது. முதல்வர் விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்படும் என சட்டசபையில் பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு 10 மாதங்களாகப் பாலியல் கொடுமை நடந்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து அந்தப் பெண் வெளியே சொல்லாமல் இருந்ததற்கு முக்கியக் காரணம் முதல் குற்றவாளிகளே தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான். விருதுநகர் பாலியல் விவகாரம் குறித்து முதலமைச்சர் சட்டசபையில் பேசிய அந்த நேரத்திலேயே வேலூரில் ஆட்டோவில் வந்த இளம்பெண் ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகச் செய்தி வெளியாகிறது. இது குறித்து அந்த இளம்பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தனது பெயர் விவரங்களை மறைத்து இமெயில் மூலமாக புகார் அளித்தும், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நடுரோட்டில் பணத்துக்காகச் சண்டை போட்டுக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமே போலீஸாருக்குத் தெரியவருகிறது. அதன் பிறகே அந்தப் பெண் இமெயில் மூலமாக அனுப்பிய புகாரும் எடுத்து விசாரிக்கப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

காவல்துறையைச் சீர்திருத்தம் செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வத்தின் பாதுகாவலருக்கு சென்னையில் நடுரோட்டில் வைத்து அரிவாள் வெட்டு விழுகிறது. இப்படித்தான் இருக்கிறது சட்டம்-ஒழுங்கு. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தமிழகத்தில் காவல்துறையைச் சுதந்திரமாக செயல்படவிடாமல் அதன் கைகள் கட்டி போடப்பட்டுள்ளன. ஆகவே காவல்துறையைச் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். டெல்லி நிர்பயா சம்பவம்போல வேலூர் சம்பவம் நடந்துள்ளது. காஷ்மீரில் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டதற்காக போராட்டம் நடத்திய கனிமொழி எம்.பி., விருதுநகர் சம்பவத்தில் தி.மு.க-வினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதற்காகப் பட்டும்படாமல் பேசுகிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பா.ஜ.க இன்று நடத்தும் போராட்டத்தால் நாளை எதுவும் மாறப்போவதில்லை. ஆனால் அநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்க, பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்க பா.ஜ.க அங்கு இருக்கும் என்பதைத் தெரியப்படுத்தவே இந்தப் போராட்டம். முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போதும் துபாய்க்குத் தனியே செல்லவில்லை. அவருடன் ஒரு பட்டாளமே சென்றுள்ளது. முதல்வரின் துபாய் பயணத்தையொட்டி, 5 ஆயிரம் கோடி ரூபாய் அங்கு பறந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்துவைக்க எதற்கு அவ்வளவு பணம்?" என்று காட்டமான கேள்வியுடன் கண்டன உரையை முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism