Published:Updated:

நடுராத்திரியில் போன் பண்ணி கூப்பிடுறாங்க... சீறும் பா.ஜ.க திருநங்கை நிர்வாகி

ரதி
பிரீமியம் ஸ்டோரி
ரதி

‘நீங்க எனக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுக்கலைன்னா நான் என்ன பண்றேன்னு பாருங்க’னு சொன்னவர் என்மீது தவறான புகார் கொடுத்திருக்காங்க.

நடுராத்திரியில் போன் பண்ணி கூப்பிடுறாங்க... சீறும் பா.ஜ.க திருநங்கை நிர்வாகி

‘நீங்க எனக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுக்கலைன்னா நான் என்ன பண்றேன்னு பாருங்க’னு சொன்னவர் என்மீது தவறான புகார் கொடுத்திருக்காங்க.

Published:Updated:
ரதி
பிரீமியம் ஸ்டோரி
ரதி

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, ரதி எனும் திருநங்கை சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘மோடி சென்னைக்கு வந்திருந்தபோது வரவேற்புக்கு ஆட்களை அழைத்து வரச்சொன்ன மாவட்டத் தலைவர் கபிலன் பணம் தராமல் ஏமாற்றிவிட்டார்’ என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ரதி, “ரொம்ப காலமா பா.ஜ.க-வுல இருக்கேன். நான் செய்யற வேலைகளைப் பார்த்து சென்னை மாநகராட்சி கவுன்சிலரா கட்சி சார்புல நிக்கவெச்சாங்க. எங்க பகுதியை புது மாவட்டமாகப் பிரிச்சு கபிலனைத் தலைவராக நியமிச்ச பிறகுதான் பிரச்னையே. அவர், ரௌடிப் பசங்களைவெச்சு போன் பண்ணிக் கூப்பிடுறார். ‘எதுக்கு’ன்னு கேட்டா, ‘அண்ணா தனியா பேசணும்னு சொல்றார்... உடனே வா’னு அவங்க சொல்றாங்க. ‘நான் பகல்ல வர்றேன்’னு சொன்னாலும், விடாம போன் போட்டுக்கிட்டே இருப்பாங்க.

நடுராத்திரியில் போன் பண்ணி கூப்பிடுறாங்க... சீறும் பா.ஜ.க திருநங்கை நிர்வாகி

மோடி ஜி சென்னைக்கு வந்தப்ப, ‘ஐம்பது பேரைக் கூட்டிட்டு வந்துரு ரதி’னு கபிலன் சொன்னார். ‘அண்ணா என்கிட்ட காசு இல்லை. இப்பதான் கவுன்சிலரா நின்னு பணமெல்லாம் போச்சு’னு சொன்னேன். ‘அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்’னு சொன்னதால, நானும் கூட்டிட்டுப் போயிருந்தேன். அதுக்கு இன்னும் அவர் பணம் கொடுக்கலை.

ஒரு தடவை, மாவட்டத் தலைவர் முன்னாடியே ஒருத்தர், ‘உனக்கு மாவட்டச் செயலாளர் போஸ்ட்டிங் வாங்கித் தர்றேன். ஒரு ஐம்பதாயிரம் மட்டும் ரெடி பண்ணும்மா’னு சொன்னார். ‘இல்லண்ணா, இனி என்கிட்ட பணம் இல்லை’னு சொன்னேன். இப்படி பேசிக்கிட்டு இருக்கும்போதே போதையில் இருந்த இன்னொருத்தர் என் மேல கைவெச்சார். அவர்களுடன் கபிலனும் போதையில் இருந்தார். ஏதோ தப்பா தெரியுதுனு அங்கருந்து கிளம்பிட்டேன். அதுக்குப் பிறகுதான் தலைவருக்கு லெட்டர் போட்டேன்” என்றார்.

கபிலன்
கபிலன்
கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

வட சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கபிலனோ, “அவங்களுக்குப் பதவி கொடுக்கலைங்கிற காழ்ப்புணர்ச்சி யில, ‘டி புரொமோட்’ ஆன சில சீனியர் நிர்வாகிகளோட சேர்ந்துக்கிட்டு அபாண்டமா புகார் கொடுத்திருக்காங்க. நிறைய நிர்வாகிகள் போட்டியிட்டதால, ரதிக்கு வாய்ப்பு கொடுக்க முடியாமல்போனது. ‘நீங்க எனக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுக்கலைன்னா நான் என்ன பண்றேன்னு பாருங்க’னு சொன்னவர் என்மீது தவறான புகார் கொடுத்திருக்காங்க. முதல்ல, எனக்குக் குடிப் பழக்கமே கிடையாது” என்கிறார்.

பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் பேசினோம். “நாங்கள் யாரையும் காசு கொடுத்து கூட்டத்துக்கு அழைத்துவரச் சொல்வதில்லை. இருந்தாலும் விசாரிக்கிறோம். யார்மீது தவறு இருந்தாலும் அவர்கள்மீது உறுதியான நடவடிக்கை இருக்கும்” என்றார்.