Published:Updated:

``காஷ்மீரின் பொருளாதாரத்தை அழிக்க பாஜக முயற்சி... மோடி மீது நம்பிக்கையில்லை!" - மெகபூபா முப்தி

மெகபூபா முப்தி

பா.ஜ.க அரசு ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரத்தை அழித்து, மக்களை ஒடுக்க முயற்சி செய்வதாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இது தொடர்பாக குப்வாராவில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ``பா.ஜ.க ஜம்மு காஷ்மீரில் மோசமான சூழலை உருவாக்கி உள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக, மக்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

காஷ்மீர்
காஷ்மீர்

காஷ்மீரில் தினமும் ரெய்டு நடத்தப்படுகிறது. ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். வெளியில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஜம்மு காஷ்மீரில் பணியமர்த்தப்படுகிறார்கள். பா.ஜ.க அரசு ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரத்தை அழித்து மக்களை ஒடுக்க முயற்சி செய்து வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஆனால், பிரதமர் மோடி இவை அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள்’’ என்று பா.ஜ.க-வை கடுமையாகச் சாடினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism