Published:Updated:

``புலனாய்வு நிறுவனங்களின் உதவியுடன் பாஜக அரசு `துக்ளக் ஆட்சி' நடத்திவருகிறது” - மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

``துக்ளக் ஆட்சியை நடத்த பாஜக அரசு ஏஜென்சிகளைப் பயன்படுத்துகிறது'' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

``புலனாய்வு நிறுவனங்களின் உதவியுடன் பாஜக அரசு `துக்ளக் ஆட்சி' நடத்திவருகிறது” - மம்தா பானர்ஜி

``துக்ளக் ஆட்சியை நடத்த பாஜக அரசு ஏஜென்சிகளைப் பயன்படுத்துகிறது'' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Published:Updated:
மம்தா பானர்ஜி

கொல்கத்தாவிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜார்கிராமில் நடைபெற்ற திரிணாமுல் தொழிலாளர்கள் கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். அதன் பிறகு பேசிய அவர், `` சில புலனாய்வு நிறுவனங்களின் உதவியுடன் பாஜக அரசு மத்தியில் துக்ளக் ஆட்சி நடத்திவருகிறது. அரசியல் கணக்கைத் தீர்த்துக்கொள்வதற்காக ஒன்றிய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் தேசத்தைப் பிளவுபடுத்த முயல்கிறார்கள். காவிக் கட்சி நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களையும் அழித்துவிட்டது.

மம்தா பானர்ஜி - மோடி
மம்தா பானர்ஜி - மோடி

மேற்கு வங்கத்தில் வன்முறை நடந்துவருவதாகக் கூறுகின்றனர். மாநிலத்தை இழிவுபடுத்துவதற்காக காவிக் கட்சி ஒரு தவறான பிரசாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இங்கு எப்போது வன்முறைச் சம்பவங்கள் நடந்தாலும், நடவடிக்கை எடுத்துவருகிறோம். மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை.

துக்ளக் ஆட்சியால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. பணியாளர்கள் தேர்வு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அவ்வாறு அதில் தவறு நடந்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism