Published:Updated:

அன்று பட்டேல்... இன்று காமராஜர்... காங். தலைவர்களை அபகரிக்கிறதா பா.ஜ.க?

அன்று பட்டேல்... இன்று காமராஜர்...
பிரீமியம் ஸ்டோரி
அன்று பட்டேல்... இன்று காமராஜர்...

ஜனசங்கத்தின் வழித்தோன்றலான பா.ஜ.க-வால் அந்தக் கட்சிக்குச் சித்தாந்தம் வழங்கிய கோல்வாக்கருக்கு சிலைவைக்க முடியுமா...

அன்று பட்டேல்... இன்று காமராஜர்... காங். தலைவர்களை அபகரிக்கிறதா பா.ஜ.க?

ஜனசங்கத்தின் வழித்தோன்றலான பா.ஜ.க-வால் அந்தக் கட்சிக்குச் சித்தாந்தம் வழங்கிய கோல்வாக்கருக்கு சிலைவைக்க முடியுமா...

Published:Updated:
அன்று பட்டேல்... இன்று காமராஜர்...
பிரீமியம் ஸ்டோரி
அன்று பட்டேல்... இன்று காமராஜர்...

தமிழ்நாடு காங்கிரஸாரிடம் இன்னமும் எஞ்சியிருப்பது, ‘காமராஜர் ஆட்சியை அமைப்போம்’ என்ற ஒரே முழக்கம்தான். “அதற்கும் ஆபத்து வந்துவிட்டது... படேலைப்போலவே, காமராஜரையும் அபகரிக்கப் பார்க்கிறது பா.ஜ.க...” என்று பதறுகிறார்கள் காங்கிரஸார்!

காரணம் இதுதான். மக்களவைத் தேர்தல் நேரத்தில் காமராஜரை வானளாவ புகழ்ந்தார் மோடி. இப்போது, காமராஜர் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடிய பா.ஜ.க., ஜூலை 15 முதல் கொரோனாவுக்கான பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாகச் செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது. ‘காமராஜரின் நினைவிடத்தைப் புதுப்பிக்க ஒரு கோடி ரூபாய் கொடுக்கத் தயார்’ என்று அண்ணாமலையும் அறிவித்திருக்கிறார். புதுச்சேரியில் காமராஜரின் சிலையை ஆளுநர் தமிழிசை திறந்துவைத்திருக்கிறார்.

அன்று பட்டேல்... இன்று காமராஜர்... காங். தலைவர்களை அபகரிக்கிறதா பா.ஜ.க?

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம். “ஆர்.எஸ்.எஸ்-ஸைத் தடைசெய்த சர்தார் பட்டேலுக்குச் சிலைவைத்த பா.ஜ.க., இப்போது, எந்த காமராஜரை ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் எரித்துக் கொல்ல முயன்றனவோ, அதே காமராஜரைப் போற்றுகிறது. ஜனசங்கத்தின் வழித்தோன்றலான பா.ஜ.க-வால் அந்தக் கட்சிக்குச் சித்தாந்தம் வழங்கிய கோல்வாக்கருக்கு சிலைவைக்க முடியுமா... சொந்தக் கட்சியில் பெருமைக்குரிய தலைவர்கள் இல்லையென்பதால், பட்டேலையும் காமராஜரையும் சொந்தம் கொண்டாடுகிறது பா.ஜ.க. அப்படியே அவர்களைத் தங்கள் தலைவர்களாக அபகரிக்கவும் பார்க்கிறது. பெருந்தலைவர் காமராஜரையும், காங்கிரஸ் கட்சியையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. காமராஜரின் அரசியல் பாரம்பர்யத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தொடர்ந்து காப்பாற்றி வருகிறது. காமராஜர் நினைவிடம் தமிழ்நாட்டு அரசால் பராமரிக்கப்பட்டுவருவதால், அதைப் புதுப்பிப்பேன் என்று கூறுவதே வெற்று விளம்பர அரசியல்தான். இந்தச் செயல் மக்கள் மனதில் மேன்மேலும் பா.ஜ.க மீதான வெறுப்பைத்தான் உண்டாக்கும்” என்றார்.

கோபண்ணா,பொன்.ராதாகிருஷ்ணன்
கோபண்ணா,பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “தேசியத் தலைவர்கள் என்றால் என்ன அர்த்தம்... தேசியத்துக்கு உடைமையாகிவிட்டவர்களைத்தான் அப்படிச் சொல்கிறோம். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் வாழ்ந்தவர்கள், நாட்டுக்குத் தன்னை அர்ப்பணம் செய்தவர்களெல்லாம் நாட்டுடைமையானவர்கள். அப்படிப்பட்ட தலைவர்களைக் கொண்டாடுவதற்கு அவர்கள் இருந்த இயக்கம் தவறும்போது, மற்றவர்களும் கைவிட்டுச் செல்ல வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்... அவர்களுடைய தியாகம் மதிக்கப்பட்டாக வேண்டும். இது போன்று பேசுவதால்தான், சாதி அமைப்புகள் தேசியத் தலைவர்களை தங்கள் சாதிக்குள் அடைக்கப்பார்க்கின்றன. எந்த தேசியத் தலைவரும் அவர்கள் காலத்துக்குப் பின்னர், அந்தந்தக் கட்சிக்கு மட்டுமே சொந்தமானவர்கள் இல்லை. அப்படி யாரும் உரிமை கொண்டாடவும் முடியாது” என்றார்.

தேர்தல் வருதுல்ல..!