Election bannerElection banner
Published:Updated:

`சிஏஏ சட்டம் ரத்து’ - அதிமுக-வின் வாக்குறுதிக்கு `நோ’ சொன்ன பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி.ரவி!

சிஏஏ விவகாரம்
சிஏஏ விவகாரம்

``மத்திய அரசின் சிஏஏ சட்டத்தில் மாநில அரசாங்கம் தலையிட முடியாது. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையிலிருக்கும் இது தொடர்பான வாக்குறுதியை வாபஸ் பெறக் கோரி வலியுறுத்துவோம்'' - சி.டி.ரவி

தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலுமே, `குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம்' என்கிற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட காலத்திலிருந்தே தி.மு.க இதை எதிர்த்துவருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதேநேரத்தில், அ.தி.மு.க-வின் எம்.பி-க்கள் அனைவரும் மாநிலங்களவையில் இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல், ``இந்தச் சட்டத்தால் எந்தச் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது?'' என்று முதல்வர் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரை நோக்கிக் கேள்வியெழுப்பியிருந்தார். ஆனால், இப்போது `சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம்' என்று அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதையடுத்து, ``இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறத்தான் அ.தி.மு.க இவ்வாறு வாக்குறுதி அளித்திருக்கிறது'' என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

`CAA விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டோம்!' எடப்பாடி பழனிசாமி யோசனையும் மத்திய அரசின் முட்டுக்கட்டையும்

இந்தநிலையில், பா.ஜ.க-வின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும், அகில இந்திய செயலாளருமான சி.டி.ரவி, ``சிஏஏ-வுக்கு எதிராகத் தனது கட்சித் தொடர்ந்து போராடும் என தி.மு.க-வின் உரிமையாளர் ஸ்டாலின் கூறுகிறார். பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து இங்கு வரும் ஒடுக்கப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டத்தை ஸ்டாலின் ஏன் எதிர்க்கிறார்? ஸ்டாலின் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் இந்தச் சட்டத்தை எதிர்க்கலாம். ஆனால், சிஏஏ சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், ``2004 முதல் 2013 வரை, மத்தியில் தி.மு.க கூட்டணி ஆட்சிதான் இருந்தது. அந்தச் சமயத்தில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவிடாமல் தி.மு.க-வைத் தடுத்தது எது... அந்தக் காலகட்டத்தில் ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார்... நாட்டைக் கொள்ளையடிப்பதில் பிஸியாக இருந்தாரோ?'' என்று ட்விட்டரில் சி.டி.ரவி பதிவிட்டிருக்கிறார்.
சி.டி.ரவி
சி.டி.ரவி

இதையடுத்து இன்று (மார்ச் 15) செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவி, ``மத்திய அரசின் சிஏஏ சட்டத்தில் மாநில அரசாங்கம் தலையிட முடியாது. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இருக்கும் இது தொடர்பான வாக்குறுதியை வாபஸ் பெறக் கோரி வலியுறுத்துவோம்'' என்று கூறியிருக்கிறார்.

CAA, NPR, NRC மூன்றையும் பற்றித் தெரியுமா... இவற்றுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமை என்ன?

சி.டி.ரவி பேசியிருப்பது குறித்து முதல்வர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு, ``சிஏஏ சட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றுதான் எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கக்கூடிய அரசு அம்மாவின் அரசு. அதன்படி சிறுபான்மை மக்கள் எங்களிடம் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதை நாங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்'' என்று பதிலளித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு