Published:Updated:

மகாராஷ்டிரா பாணியில் மேற்கு வங்கம்! - குறிவைக்கும் பா.ஜ.க... தப்பிப்பாரா மம்தா?

மம்தா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
மம்தா பானர்ஜி

மகாராஷ்டிராவில் கிடைத்ததுபோல் ஒரு ஏக்நாத் ஷிண்டே மேற்கு வங்கத்திலும் கிடைப்பாரா என்று பா.ஜ.க தேடிக் கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிரா பாணியில் மேற்கு வங்கம்! - குறிவைக்கும் பா.ஜ.க... தப்பிப்பாரா மம்தா?

மகாராஷ்டிராவில் கிடைத்ததுபோல் ஒரு ஏக்நாத் ஷிண்டே மேற்கு வங்கத்திலும் கிடைப்பாரா என்று பா.ஜ.க தேடிக் கொண்டிருக்கிறது.

Published:Updated:
மம்தா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
மம்தா பானர்ஜி

மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்த உற்சாகத்தில் இருக்கும் பா.ஜ.க., அதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி மேற்கு வங்கத்திலும் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இது தொடர்பாகப் பேசுகிறவர்கள், ‘‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் தொழில்துறை அமைச்சரான பார்த்தா சாட்டர்ஜி. அண்மையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவருக்கு மிகவும் நெருக்கமான அர்பிதா முகர்ஜி உட்பட 12 பேரின் வீடுகளில் அதிரடியாக ரெய்டு நடத்தி, 20 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், ஆசிரியர் நியமன மோசடியில் கிடைத்தது என்று அமலாக்கப்பிரிவு தெரிவித்திருக்கிறது. இந்தச் சம்பவம் மேற்கு வங்க மாநில அரசியலையே புரட்டிப்போடும் சூழலை உருவாக்கியிருக்கிறது” என்கிறார்கள்.

மகாராஷ்டிரா பாணியில் மேற்கு வங்கம்! - குறிவைக்கும் பா.ஜ.க... தப்பிப்பாரா மம்தா?

2016-ம் ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்திலும், ‘டி’ கிரேடு பணியாளர் நியமனத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்தப் புகார்களை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி, பார்த்தா சாட்டர்ஜியிடம் சி.பி.ஐ அதிகாரிகள் இரண்டு முறை விசாரித்தனர். சி.பி.ஐ-யுடன் அமலாக்கத்துறையும் சேர்ந்து அடுத்தடுத்து நடத்திய விசாரணைகளுக்குப் பின்னர் பார்த்தா சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து ‘விசாரணை ஏஜென்சிகள் மூலம் எங்களது கட்சியை உடைக்க முடியாது’ என்று பா.ஜ.க-வுக்கு மம்தா பானர்ஜி சவால்விடுத்திருக்கிறார்.

இது குறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான நிலோத்பால் பாசு, “மகாராஷ்டிராவில் கிடைத்ததுபோல் ஒரு ஏக்நாத் ஷிண்டே மேற்கு வங்கத்திலும் கிடைப்பாரா என்று பா.ஜ.க தேடிக் கொண்டிருக்கிறது. பார்த்தா சாட்டர்ஜி கைதின் மூலம் உடனடியாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க முடியாவிட்டாலும், அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த முடிந்திருக்கிறது” என்றார்.

பார்த்தா சாட்டர்ஜி - நிலோத்பால் பாசு - மிதுன் சக்ரவர்த்தி
பார்த்தா சாட்டர்ஜி - நிலோத்பால் பாசு - மிதுன் சக்ரவர்த்தி

இந்தக் கருத்தை உறுதிப்படுத்துவதுபோல, ‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 38 எம்.எல்.ஏ-க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக’ பா.ஜ.க-வைச் சேர்ந்தவரும், நடிகருமான மிதுன் சக்ரவர்த்தி கருத்து தெரிவித்திருக்கிறார்.

‘விசாரணை அமைப்புகள் மூலம் மாநிலக் கட்சிகளை உடைப்பதாக’ எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் பா.ஜ.க., ‘பார்த்தா சாட்டர்ஜி கைது ஒரு தொடக்கம்தான்... வரும் நாள்களில் மேலும் எதிர்பார்க்கலாம்’ என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

மோடி - மம்தா மோதலின் அடுத்த அத்தியாயம் விரைவில்!