Published:Updated:

ஜார்க்கண்ட் தேர்தல் கருத்துக்கணிப்பு - இன்னொரு மாநிலத்திலும் ஆட்சியை இழக்கிறதா பா.ஜ.க?

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, ஜார்க்கண்டிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை இழக்கப்போவதாகக் கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தோல்வியைச் சந்திக்கும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. நாட்டில் பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து கோலோச்சிவந்த பாரதிய ஜனதா கட்சி, கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பலத்தை இழந்துவருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், 15 ஆண்டுகளாக மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்துவந்த பா.ஜ.க, ஆட்சியை இழந்தது. அங்கு, காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்து கமல்நாத் முதலமைச்சராக உள்ளார்.

ஜார்கண்டில் வாக்களிக்கும் மக்கள்
ஜார்கண்டில் வாக்களிக்கும் மக்கள்

உச்சக்கட்டமாக, மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சியை இழந்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்துள்ளது. சமீபத்தில், சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியில் இருந்துவந்தது. அங்கு, ஐந்து கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த மாநிலத்தில் , தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை இழக்கும் என்று கூறுகின்றன.

`குடியுரிமை திருத்தச் சட்டம்' - ரஜினி கருத்தும் எதிர்வினையும்!

காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முன்னணி கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று தேர்தல் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. மொத்தமுள்ள 81 இடங்களில், இந்தக் கூட்டணி 50 இடங்கள் வரை கைப்பற்றும் என்று 'இந்தியாடுடே' மற்றும் 'மேக்ஸிஸ்' கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. பா.ஜ.க கூட்டணிக்கு 32 சீட்டுகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

ஜார்க்கண்ட் மாநிலம்
ஜார்க்கண்ட் மாநிலம்

ஜார்க்கண்டில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளது என்று சி -வோட்டர்ஸ் கணித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 32 சீட்டுகளும் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 35 சீட்டுகளும் கிடைக்கும் என சி -வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு சொல்கிறது.