Published:Updated:

32 மசோதாக்களுடன் பாஜக; 13 கேள்விகளுடன் எதிர்க்கட்சிகள் : இன்று கூடுகிறது மழைக்காலக் கூட்டத்தொடர்!

நாடாளுமன்றம்

``நாடாளுமன்ற விவாதங்கள் பயனுள்ளதாக இருக்கவும், பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் விவாதங்கள் அமையவும் உறுப்பினர்களை வலியுறுத்துகிறேன்." - மோடி

32 மசோதாக்களுடன் பாஜக; 13 கேள்விகளுடன் எதிர்க்கட்சிகள் : இன்று கூடுகிறது மழைக்காலக் கூட்டத்தொடர்!

``நாடாளுமன்ற விவாதங்கள் பயனுள்ளதாக இருக்கவும், பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் விவாதங்கள் அமையவும் உறுப்பினர்களை வலியுறுத்துகிறேன்." - மோடி

Published:Updated:
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. எனவே, இந்தக் கூட்டத்தைச் சுமுகமாக நடத்த பா.ஜ.க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் நடத்தியிருக்கிறது. அந்தக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் 32 மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அவற்றில் 14 மசோதாக்கள் தயாராக உள்ளன. இவை அனைத்தின் மீதும் ஜனநாயகரீதியில் விவாதம் நடத்தப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.

பாஜக தலைவர்கள்
பாஜக தலைவர்கள்

அதேபோல எதிர்க்கட்சிகள் அக்னிபத் திட்டம், எரிபொருள்கள் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, சிபிஐ, அமலாக்கப் பிரிவுகளை அரசு தவறாகப் பயன்படுத்திய விவகாரம், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட 13 நாட்டின் அடிப்படைப் பிரச்னைகள் குறித்துக் கேள்வி எழுப்பவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடருக்கு ஒத்துழைப்பு அளித்து, நாடாளுமன்ற விவாதங்கள் பயனுள்ளதாக இருக்கவும், பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் விவாதங்கள் அமையவும் உறுப்பினர்களை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!