Published:Updated:

``கொரோனா வராமல் இருந்திருந்தால் மேற்கு வங்கத்தில் பாஜக-தான் ஆட்சியமைத்திருக்கும்!" - ஜே.பி.நட்டா

ஜே.பி.நட்டா

`கொரோனா தொற்று பேரழிவின் இரண்டாவது அலை பிரசாரத்தைப் பாதிக்காமலிருந்திருந்தால் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்திருக்கும்.' - ஜே.பி.நட்டா

``கொரோனா வராமல் இருந்திருந்தால் மேற்கு வங்கத்தில் பாஜக-தான் ஆட்சியமைத்திருக்கும்!" - ஜே.பி.நட்டா

`கொரோனா தொற்று பேரழிவின் இரண்டாவது அலை பிரசாரத்தைப் பாதிக்காமலிருந்திருந்தால் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்திருக்கும்.' - ஜே.பி.நட்டா

Published:Updated:
ஜே.பி.நட்டா

பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடந்த அந்தக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``கொரோனா தொற்று பேரழிவின் இரண்டாவது அலை பிரசாரத்தைப் பாதிக்காமலிருந்திருந்தால் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்திருக்கும். கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போதே நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்பது தெளிவாகத் தெரிந்தது.

ஆனால் நான்காம் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு கொரோனாவின் இரண்டாவது அலையால் எங்கள் பிரசாரத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. நான்காம் கட்ட வாக்குப்பதிவுக்குப்பிறகு, பிரசாரம் கிட்டத்தட்ட ஸ்தம்பித்துவிட்டது, மீதமுள்ள கட்டங்களில் தேர்தல்கள் எந்த பிரசாரமும் இல்லாமல் நடந்தன. அதனால்தான் எங்களால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.

ஜேபி நட்டா
ஜேபி நட்டா

அடுத்த முறை ஆட்சிக்கு வந்து எங்கள் வெற்றிப் பேரணியைக் கொல்கத்தாவின் பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் நடத்துவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நாம் ஜனநாயக ரீதியாக நமது போராட்டத்தைத் தொடர வேண்டும். மேலும், திரிணாமுல் காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டும். ஏனென்றால் இந்திய மக்கள் சரியான நேரத்தில் எதிர்வினையாற்றுகிறார்கள். வங்காளப் பெருமையைப் பேண வேண்டும், அதை நிலைநாட்ட வேண்டும், அதற்காகப் போராட வேண்டும்.

ஏனென்றால் அது பெருமை மற்றும் மரியாதைக்குரிய விஷயம். வங்காளப் பெருமையை இழிவுபடுத்தவும் புண்படுத்தவும் முயல்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும். சுவாமி விவேகானந்தரின் பிரசங்கங்கள், வங்காளப் பெருமை இலக்கியப் படைப்புகளில் மறைக்கப்படவில்லை. அது நமது செயல்பாடுகளில் உள்ளது" எனப் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism