Published:Updated:

புதிய நாடாளுமன்றம்: ``சுப காலங்களில் கெட்ட சகுனமாக முன்வருகிறார் ராகுல் காந்தி!" - சாடும் பாஜக

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்துவைக்க எதிர்ப்பு தெரிவித்ததற்காக, ராகுல் காந்தியை பா.ஜ.க சாடியிருக்கிறது.

Published:Updated:

புதிய நாடாளுமன்றம்: ``சுப காலங்களில் கெட்ட சகுனமாக முன்வருகிறார் ராகுல் காந்தி!" - சாடும் பாஜக

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்துவைக்க எதிர்ப்பு தெரிவித்ததற்காக, ராகுல் காந்தியை பா.ஜ.க சாடியிருக்கிறது.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா

இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி மே 28-ம் தேதி திறந்துவைக்கவிருப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இது தொடர்பாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி, ``சாவர்க்கரின் பிறந்தநாளில் இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறக்கவிருக்கின்றனர். இந்தக் கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும். பிரதமர் மோடி திறக்கக் கூடாது" என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``புதிய நாடாளுமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. அதேபோல தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை.

புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றம்

தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித், பழங்குடிச் சமூகங்களிலிருந்து இந்திய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதை மோடி அரசு உறுதிசெய்திருக்கிறது" என விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``இந்திய நாட்டில் ஒரு வரலாற்றுத் தருணம் ஏற்படும்போதெல்லாம் ராகுல் காந்தி, நெஞ்சில் அடித்துக்கொள்கிறார்.

`புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் அல்ல. குடியரசுத் தலைவர்தான் திறந்துவைக்க வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறார். அவர் ஏன் இப்படி இருக்கிறார்... நாடு முன்னேறும்போது, சுப காலங்களில் கெட்ட சகுனமாக முன்வருகிறார். புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஜனநாயகக் கோயிலாக மாறும் வரலாற்று தருணத்தை வரவேற்க முடியாமல் சிறு எண்ணம்கொண்டவராக இருக்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷும் அதைக் கூறியிருந்தார். நாடாளுமன்றத்தைப் பற்றி கனவு காண்கிற அவர்கள்தான் ஊழலில் ஈடுபடுகிறார்கள். பிரதமர் மோடி அவர்களின் கனவுகளை நனவாக்கும்போது, நெஞ்சில் அடித்துக்கொள்ளத் தொடங்குகிறார்கள்" என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார்.