Published:Updated:

சாவர்க்கர்-திப்பு மோதல் விவகாரம்: ``இந்து சமுதாயம் வெகுண்டெழுந்தால்..!" - பாஜக தலைவர் எச்சரிக்கை

பாஜக தலைவர் எச்சரிக்கை

``தேச விரோத செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்." - கே.எஸ்.ஈஸ்வரப்பா

சாவர்க்கர்-திப்பு மோதல் விவகாரம்: ``இந்து சமுதாயம் வெகுண்டெழுந்தால்..!" - பாஜக தலைவர் எச்சரிக்கை

``தேச விரோத செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்." - கே.எஸ்.ஈஸ்வரப்பா

Published:Updated:
பாஜக தலைவர் எச்சரிக்கை

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி கர்நாடக மாநிலம், ஷிவமோகாவில் சாவர்க்கர், திப்பு சுல்தான் படங்கள் வைப்பதில் இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவருக்கு கத்துக் குத்து விழுந்தது. இதையடுத்து போலீஸார் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தனர். அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

நேற்று நடந்த மோதல் சம்பவத்தின்போது பிரேம் சிங் என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக நதீம், தன்வீர், சார்பி, அப்துல் ரஹ்மான் ஆகியோர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கே.எஸ்.ஈஸ்வரப்பா
கே.எஸ்.ஈஸ்வரப்பா

இந்த நிலையில், கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ``இதுபோன்ற தேச விரோத செயல்களில் ஈடுபடும் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு இஸ்லாமிய மூத்த உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன். இந்து சமுதாயம் வெகுண்டெழுந்தால், இதுபோன்ற செயல்கள் நிலைக்காது" எனத் தெரிவித்தார்.