Published:Updated:

கோவை: `தி.மு.க தமிழின துரோகி... பா.ஜ.க மட்டுமே தமிழை வளர்க்கிறது’ - சொல்கிறார் ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

பா.ஜ.க மட்டுமே தமிழை வளர்க்க நினைப்பதாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா கோவை பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``அமெரிக்காவில் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர், நிர்வாகப் பிரச்னையால் கொல்லப்பட்டார் என்பதற்காக அதை இனக் கலவரமாக மாற்றி, ட்ரம்ப்புக்கு எதிரான அரசியல் சூழ்நிலையை உருவாக்கினார்கள். அப்படி இந்தியாவிலும் ஒரு கலவரத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அதற்காகத்தான் ஜனவரி 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடத்தினர். பிணத்தைவைத்து அரசியல் செய்து, உலக அரங்கில் இந்தியாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
சமீபகாலமாக ஹெச்.ராஜா வெளியில் வராதது பற்றி மக்கள் கருத்து?! #VikatanPollResults

தற்போது, மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 2 லட்சம் கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த தமிழச்சி ஒருவர் மத்திய நிதியமைச்சராக இருப்பதால் பா.ஜ.க இவ்வளவு திட்டங்களை இங்கு கொண்டு வந்திருக்கிறது. தி.மு.க-வில் அத்தனை அமைச்சர்கள் இருந்தும் வேஸ்ட் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள், தி.மு.க-வில் எட்டு அமைச்சர்கள், காங்கிரஸில் இருவர் என்று மொத்தம் தமிழகத்துக்கு 10 அமைச்சர்கள் இருந்தும், இங்கு மூலதனம் வரவில்லை. 2019-ம் நாடாளுமன்றத் தேர்தலைவைத்து தி.மு.க இங்கு வலிமையாக இருப்பதாக ஒரு பிம்பம் உருவாகியிருக்கிறது.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

அந்தத் தேர்தலுக்கு பிறகு நிறைய மாற்றங்கள் நடந்துவிட்டன. அதன் பிறகு, ஆறு மாத இடைவெளியில் நடந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க 8,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெல்ல முடிந்தது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் எங்கள் கூட்டணிதான் வென்றது.

2019-ம் ஆண்டுக்குப் பிறகு தி.மு.க தொடர்ந்து பலவீனமாகிக்கொண்டிருக்கிறது. சசிகலா என்ன வேண்டுமானால் முடிவு எடுக்கலாம். மற்றபடி அவரது வருகை அ.தி.மு.க-வை எந்த வகையிலும் பாதிக்காது. கேந்திரிய வித்யாலயா பள்ளி பாடத்திட்டம், இடமாற்றம் செய்யக்கூடிய மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்காகத் தொடங்கப்பட்டது. தி.மு.க தமிழின் பெயரால் ஆட்சிக்குவந்த தமிழின துரோகிகள்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

1967 வரை ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் படிப்பது கட்டாயமாக இருந்தது. அதன் பிறகு இங்கு படித்த டாக்டர்கள், இன்ஜினீயர்கள் போன்றோருக்கு தமிழ் எழுதவே தெரியவில்லை. இப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கியது இந்தத் திராவிட கட்சிகள்தான்.

தி.மு.க-வினர் நடத்தும் பள்ளிகளிலே தமிழ் இல்லை. பா.ஜ.க மட்டும்தான் தமிழை வளர்க்க நினைக்கிறது. எம்மதமும் சம்மதம் என்பது சரியென்றால், எம்மொழியும் என் மொழி என்பதில் என்ன தவறு இருக்கிறது? நாங்கள் அ.தி.மு.க-வுடன் கூட்டணி தொடர்கிறோம். மக்களை திசை திருப்புவதற்காக, தி.மு.க நிறைய புரளிகளைப் பரப்பிவருகிறது.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

தமிழகத்தில், தற்போது எந்த கிராமத்துக்குச் சென்றாலும், பா.ஜ.க கொடியைப் பார்க்காமல் செல்ல முடியாது. அந்த அளவுக்கு நாங்கள் வளர்ந்திருக்கிறோம். அதற்குத் தகுந்ததுபோல கூட்டணியில் போதுமான இடங்களைப் பெறுவோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு