Published:Updated:

வாஜ்பாய் டு மோடி வரை... பி.ஜே.பி-யும் ரஜினியும்!

ஜெ.பிரகாஷ்

நடிகர் ரஜினிகாந்த், சமீபகாலமாக பி.ஜே.பி-க்கும் அந்தக் கட்சி கொண்டுவரும் சில திட்டங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவருகிறார். பி.ஜே.பி.-க்கு ஆதரவாய் அவர் தெரிவித்த கருத்துகளில் சில இதோ...

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலேயே, "இந்திய நாட்டின் முக்கியப் பிரச்னையான தண்ணீர்ப் பிரச்னைக்கு யார் தீர்வு காண்கிறார்களோ, அவர்களுக்கே என் ஓட்டு!" என்றார்.

வாஜ்பாய், அத்வானி, ரஜினி
வாஜ்பாய், அத்வானி, ரஜினி

பண மதிப்பிழப்பை அமல்படுத்தியபோது, வாழ்த்து தெரிவித்தவர், "புதிய இந்தியா பிறந்திருக்கிறது. ஜெய்ஹிந்த்" என்றார்.

மோடியுடன் ரஜினி
மோடியுடன் ரஜினி

தூய்மை இந்தியா திட்டத்தின்போது, "தூய்மைக்காகப் பிரதமர் மோடி முன்னெடுத்திருக்கும் தூய்மைச் சேவை திட்டத்துக்கு, நான் எனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன். தூய்மையே கடவுள்" என்றார்.

மோடியுடன் ரஜினி
மோடியுடன் ரஜினி

அப்பாவி மக்களின் மீதான தாக்குதல் நடவடிக்கையாக அமைந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிப் பேசியவர், "எல்லாவற்றுக்கும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாகிவிடும்" என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

சென்னை டு சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ஆதரித்துப் பேசியவர், "இதுபோன்ற பெரிய திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானது" என்றார்.

எட்டுவழிச் சாலை
எட்டுவழிச் சாலை

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது பி.ஜே.பி. வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து பேசியவர், "நதிகள் இணைப்பு குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது" என்றார்.

மோடி - பா.ஜ.க. தேர்தல் அறிக்கை
மோடி - பா.ஜ.க. தேர்தல் அறிக்கை

மோடிக்கு எதிரான ஹேஷ்டேக் பற்றி கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், "10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால், அவர்தானே (மோடி) பலசாலி'' என்றார்.

ரஜினி
ரஜினி

பி.ஜே.பி. குறித்து கருத்து தெரிவித்தவர், "அக்கட்சி, ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் கூறவேண்டும்" என்றார் பட்டும்படாமல்.

Narendra Modi
Narendra Modi

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக வெற்றிபெற்றது குறித்து பாராட்டு தெரிவித்தவர், "இது, மோடி என்கிற தனி மனிதனுக்குக் கிடைத்த வெற்றி. அவர் மக்களை ஈர்க்கும் தலைவராக இருக்கிறார்" என்றார்.

மோடி, ரஜினி
மோடி, ரஜினி

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்துப் பேசியவர், "மிஷன் காஷ்மீரின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்ணன் போன்றவர்கள்" என்றார்.

அமித் ஷாவுடன் ரஜினி
அமித் ஷாவுடன் ரஜினி
மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா