Published:Updated:

ஸ்டாலின் இமேஜை டேமேஜ் செய்ய 'தனி' டீம்: பி.ஜே.பி பிளானுக்கு 2 காரணங்கள்!

stalin
stalin

தி.மு.க மீது ஏற்கெனவே சி.பி.ஐ வழக்குகள் இருந்துள்ளன. குறிப்பாக, 2ஜி வழக்கு இப்போது மேல்நீதிமன்ற முறையீட்டில் உள்ளது.

தி.மு.க-வில் மீண்டும் சி.பி.ஐ பீதி கிளம்பியுள்ளது. இதைக் கிளப்பிவிட்டதே பி.ஜே.பி-க்கு நெருக்கமானவர்கள்தான் என்கின்றனர். எட்டு ஆண்டுகள் தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப்பொறுப்பில் இல்லை. மத்தியில் ஆட்சியில் அங்கம்வகித்தும் ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன. இப்போது புதிதாக அவர்கள்மீது எந்தப் புகாருக்கும் முகாந்திரமில்லை. ஆனால், அவர்களை அப்படியே விட்டுவிட பி.ஜே.பி தலைமை விரும்பவில்லை. தி.மு.க புள்ளிகளை வளைக்க முயலும் பி.ஜே.பி பற்றி, ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சிதான் இதுவும். விரிவாக படிக்க க்ளிக் செய்க.. http://bit.ly/2lPeF5z

மோடியின் 100 நாள் ஆட்சியில், இந்தியாவில் உள்ள தலைவர்களில் மோடியை அதிகம் விமர்சித்தவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின்தான். அந்தக் கோபம் அமித் ஷா, மோடி இருவரிடமும் இருக்கிறது. மற்றொருபுறம், தி.மு.க இரண்டாம்கட்ட தலைவர்கள் மூலம் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்றும், தி.மு.க மீது வழக்கு தொடுக்கலாம் என்றும் திட்டமிடுகிறார்கள். இந்தத் திட்டத்தையெல்லாம் மத்திய அரசுக்கு வகுத்துக்கொடுப்பது பி.ஜே.பி-க்கு வேண்டிய தமிழக ஆடிட்டர் ஒருவர்தான்.

stalin
stalin

இந்தத் திட்டத்துக்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். தி.மு.க தலைமையை டேமேஜ் செய்தால் மட்டுமே, அடுத்த தேர்தலில் அவர்களின் வெற்றியைத் தடுக்க முடியும். இரண்டாவது, ரஜினி-பி.ஜே.பி கூட்டணி அமைந்தால், அதற்குப் போட்டியான வலுவான கட்சியாக தி.மு.க இருந்துவிடக் கூடாது என முடிவு செய்திருக்கிறார்கள். தி.மு.க மீது ஏற்கெனவே சி.பி.ஐ வழக்குகள் இருந்துள்ளன. குறிப்பாக, 2ஜி வழக்கு இப்போது மேல்நீதிமன்ற முறையீட்டில் உள்ளது. அந்த வழக்கில் ஏதும் சிக்கலை ஏற்படுத்த முடியுமா என ஆராய்ந்து வருகிறார்கள். இது தெரிந்து தி.மு.க தலைமையும் கொஞ்சம் ஆடிப்போய்தான் இருக்கிறது. அதுமட்டுமல்ல... தி.மு.க தலைவர்களின் வாரிசுகள் குறித்த சில விவரங்களையும் ஒரு டீம் தயார் செய்துவருகிறது. தி.மு.க மீது பிஜே.பி எந்த அளவுக்கு கண்வைத்துள்ளதோ, அதே அளவுக்கு அ.தி.மு.க-வையும் கண்காணித்துவருகிறது.

குறிப்பாக, எடப்பாடியின் சமீபத்திய நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளதாம். சசிகலா தரப்புடன் அவர் காட்டும் நெருக்கம், கட்சியின் ஒற்றைத்தலைமையாக அவர் மாற விரும்புவது போன்றவற்றையை பி.ஜே.பி தரப்பு ரசிக்கவில்லை. 'அ.தி.மு.க-வின் வாக்குவங்கி சரியும்போது, அது தங்களுக்குச் சாதகமாக மாறவேண்டும். ஆனால் மீண்டும் சசிகலா, ஒற்றைத்தலைமை என்று அ.தி.மு.க வலுவாகி விட்டால், தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு குதிரைகளே தேர்தல் பந்தயத்தில் ஓடும் நிலை ஏற்படும். அதை மாற்றவேண்டும் என்றும் நினைக்கிறார்கள். மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கிடையில் இருந்த போட்டியை பி.ஜே.பி - திரிணாமூல் காங்கிரஸ் போட்டி என மாற்றியதைப்போல, தமிழகத்தில் திராவிடம் - தேசியம் என்கிற பதத்தோடு தி.மு.க - பி.ஜே.பி என்று எதிர்காலம் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். பி.ஜே.பி-யின் அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் மேற்பார்வையில்தான் இந்தத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன."

தி.மு.க தலைவர்களின் வாரிசுகள் குறித்த சில விவரங்களையும் ஒரு டீம் தயார் செய்துவருகிறது. தி.மு.க மீது பிஜே.பி எந்த அளவுக்கு கண்வைத்துள்ளதோ, அதே அளவுக்கு அ.தி.மு.க-வையும்

இன்னொறு பக்கம், தி.மு.க-வுக்குள்ளேயே கலகம் களைகட்டியிருக்கிறது. புறக்கணிப்பு காரணமாக கனிமொழி ரொம்பவே கவலையில் இருக்கிறார். இதையும் பயன்படுத்தப் பார்க்கிறது பி.ஜே.பி. - இது தொடர்பாக ஜூனியர் விகடன் இதழின் மிஸ்டர் கழுகு பகுதியில் இடம்பெற்றுள்ள முழு விவரம் > மிஸ்டர் கழுகு: கறுப்பு சிவப்பு கலகம்... கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி

https://www.vikatan.com/government-and-politics/kanimozhi-upset-udayanidhi-is-happy-dmk-scenario-as-told-by-kazhugar

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

அடுத்த கட்டுரைக்கு