Published:Updated:

`மீண்டும் முதல்வராகிறார் சவுகான்?’ - மத்தியப் பிரதேச பா.ஜ.க நிர்வாகிகள் தகவல்

சிவராஜ்சிங் சவுகான்
சிவராஜ்சிங் சவுகான்

மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் இன்று மாலை பதவியேற்கவுள்ளதாக பா.ஜ.க நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடந்த அதிரடி அரசியல் திருப்பங்களை அடுத்து தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதே அரசியல் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. 2018-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அங்கு மொத்தம் உள்ள 228 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும் பா.ஜ.க 107 இடங்களிலும் வெற்றிபெற்றன. இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட சமபலத்துடன் இருந்ததால், பிற கட்சிகளின் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து கமல்நாத் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.

சிந்தியா
சிந்தியா
ANI

முழுவதுமாக ஒரு வருடம் ஆட்சி செய்த கமல்நாத் தற்போது தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆளும்கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் மத்தியப் பிரதேச காங்கிரஸில் பெரும் புள்ளியாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காங்கிரஸைவிட்டு வெளியேறி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் சென்றது மட்டுமல்லாது தனது ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏ-க்களின் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார். பின்னர் அவர்களும் பாஜகவில் இணைந்துவிட்டனர்.

இதனால் கமல்நாத்தின் ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கியது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான பா.ஜ.க கோரிக்கை விடுத்தது. இதற்காக கடந்த வாரம் சட்டசபை கூட்டப்பட்டது. ஆனால், கொரோனா தொற்றால் தற்போது வாக்கெடுப்பு நடத்த முடியாது எனக் காரணம் கூறி சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார். இப்போதும் விடாத பா.ஜ.க-வின் சிவராஜ்சிங் சவுகான் உச்ச நீதிமன்றத்தின் படிகள் ஏறினார்.

கமல்நாத்
கமல்நாத்
Photo: AP

அங்கு கடந்த வெள்ளிக்கிழமைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். வாக்கெடுப்பு நடந்தாலும் தனக்குப் பெரும்பான்மை இருக்காது என்பதை உணர்ந்த கமல்நாத், உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவுக்கு முந்தைய நாள் அதாவது கடந்த வியாழக்கிழமையே தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றுள்ளது காங்கிரஸ், இருந்தும் ஒரு ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்கள் கூட அவர்கள் வழிக்கு வராததால் இறுதியாக கமல்நாத் இந்த முடிவை எடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பீதியடைந்து உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் அனைத்து மாநில அரசுகளும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால், மத்திய பிரதேசத்தைப் பொறுத்தவரை அங்கு எந்த ஆட்சி நடக்கிறது, யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தெரியாமல் அம்மாநில மக்கள் திணறி வருகின்றனர்.

சவுகான்
சவுகான்

கமல்நாத்தின் ராஜினாமாவுக்குப் பிறகு அடுத்த முதல்வர் என்ற பட்டியலில் தானாக முதல் ஆளாக வந்து சேர்ந்தார் பா.ஜ.க-வின் சிவராஜ்சிங் சவுகான். இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் பதவியேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலை 6 மணிக்கு போபாலில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் பின்னரே சவுகான் முதல்வராகப் பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சவுகான் இன்று முதல்வராகப் பதவியேற்றால் நான்காவது முறையாக அம்மாநிலத்தின் முதல்வராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு