Published:Updated:

ஜிஎஸ்டி: ``நிவாரணம் அளிக்க வேண்டிய நேரத்தில், துன்புறுத்துகிறோம்!" - மத்திய அரசைச் சாடிய பாஜக எம்.பி

பாஜக எம்.பி வருண் காந்தி

அரிசி, தயிர், பால் ஆகிய உணவுப்பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருப்பதற்கு பா.ஜ.க எம்.பி வருண் காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஜிஎஸ்டி: ``நிவாரணம் அளிக்க வேண்டிய நேரத்தில், துன்புறுத்துகிறோம்!" - மத்திய அரசைச் சாடிய பாஜக எம்.பி

அரிசி, தயிர், பால் ஆகிய உணவுப்பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருப்பதற்கு பா.ஜ.க எம்.பி வருண் காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
பாஜக எம்.பி வருண் காந்தி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கடந்த ஜூன் 29-ம் தேதி சண்டிகரில் நடைபெற்றது. அதில் கலந்தாலோசிக்கப்பட்டு பல்வேறு பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான ஜி.எஸ்.டி வரி தற்போது உயர்த்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அரிசி, தயிர், மோர், லஸ்லி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பேக் செய்யப்பட்டிருந்தால், அதற்கு 5% வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக இந்தப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக பா.ஜ.க எம்.பி வருண் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``பால், தயிர், பருப்பு, ரொட்டி வெண்ணெய், அரிசி உள்ளிட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வந்திருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் சாதனை படைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில், இது மாதிரியான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் வாடகை வீடுகளில் வசிக்கும் இளைஞர்கள்மீது இன்னும் அதிக நிதிச்சுமையை ஏற்படுத்திவிடும். அவர்களுக்கு நிவாரணம் அளிக்கவேண்டிய நேரத்தில் நாம் அவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறோம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!