Published:Updated:

``மத தலங்களை முன்னிறுத்தி மக்களைத் தூண்டுவது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும்!" - மாயாவதி

மாயாவதி ( Twitter )

வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் உயர்ந்துவரும் பணவீக்கம் ஆகிய பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பவே, பா.ஜ.க-வால் மத தலங்கள் குறிவைக்கப்படுகின்றன என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

``மத தலங்களை முன்னிறுத்தி மக்களைத் தூண்டுவது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும்!" - மாயாவதி

வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் உயர்ந்துவரும் பணவீக்கம் ஆகிய பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பவே, பா.ஜ.க-வால் மத தலங்கள் குறிவைக்கப்படுகின்றன என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

Published:Updated:
மாயாவதி ( Twitter )

அண்மையில், தாஜ் மஹாலில் பூட்டியிருக்கும் 22 அறைகளை ஆய்வுசெய்ய, தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பா.ஜ.க நிர்வாகியோருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதைத்தொடர்ந்து பா.ஜ.க எம்.பி தியா குமாரி, ``தாஜ்மஹால் இருக்கும் நிலம் எங்கள் அரச குடும்பத்துக்குச் சொந்தமானது. ஆனால், அதை ஷாஜஹான் கைப்பற்றிக்கொண்டார்" எனக் கூறிவந்தார். இது ஒருபுறமிருக்க, வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியின் சுற்றுப்புறத்திலிருக்கும் இந்துக் கடவுள்களை வழிபட அனுமதிவேண்டி தொடரப்பட்ட வழக்கில், மசூதியை ஆய்வு செய்ய விசாரணைக்குழு ஒன்றை அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஆய்வில், மசூதியினுள் சிவலிங்கம் இருப்பதாக விசாரணைக்குழு கூறியதையடுத்து,அந்தப் பகுதிக்கு சீல்வைத்து, பொதுமக்கள் வருகைக்கு தடைவிதித்தது நீதிமன்றம்.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த எந்த தடையும் இல்லை எனக் கூறி வழக்கை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

பாஜக
பாஜக

இந்த நிலையில், தொடர்ந்து மத தலங்களை குறிவைத்து எழும் இதுபோன்ற பிரச்னை குறித்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, பா.ஜ.க-வை கடுமையாகச் சாடியுள்ளார். லக்னோவில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாயாவதி, ``வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் உயர்ந்துவரும் பணவீக்கம் ஆகிய பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பவே, பா.ஜ.க மற்றும் அதன் கூட்டாளிகளால் இதுபோன்று மத தலங்கள் குறிவைக்கப்படுகின்றன. இது யாரிடமிருந்தும் மறைக்கப்படவில்லை. இந்த நிலையானது எப்போது வேண்டுமானாலும் மோசமாகலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாயாவதி
மாயாவதி

சுதந்திரம் கிடைத்துப் பல ஆண்டுகள் ஆன நிலையில், கியான்வாபி, மதுரா, தாஜ் மஹால் போன்ற இடங்களை முன்னிறுத்தி, மக்களின் மத உணர்வுகளைத்தூண்டுவது, நாட்டை பலப்படுத்தாது என்பதை பா.ஜ.க கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்குச் சொந்தமான இடங்களின் பெயர்களை அவர்கள் மாற்றும் விதம், நாட்டில் சகோதரத்துவத்தைச் சீர்குலைத்து, மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும். எனவே மக்கள் இதில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism