Published:Updated:

``மத்திய அரசின் பட்ஜெட் ஒரு பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்..." - மம்தா தாக்கு!

மம்தா பானர்ஜி

`சாதாரண பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் இருக்கிறது’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

``மத்திய அரசின் பட்ஜெட் ஒரு பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்..." - மம்தா தாக்கு!

`சாதாரண பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் இருக்கிறது’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Published:Updated:
மம்தா பானர்ஜி

சாதாரண பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் இருக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

2022- 2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் 4-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2-வது ஆண்டாகக் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கலானது. மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சியினர் பலரும் தங்கள் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டவிட்டரில், ``வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை. இது ஒரு பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்" என்று பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism