Published:Updated:

சிறையிலிருந்து தப்பிய பல்கேரியா கைதி; ஏர்போர்ட்களுக்கு அனுப்பப்பட்ட 'லுக் அவுட்' நோட்டீஸ்!

திருச்சி
திருச்சி

சிறைச்சாலை அறையிலிருந்து ஜன்னல் கம்பியை அறுத்துக்கொண்டு கைதி தப்பிச் சென்றிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் மத்திய சிறைச்சாலை அமைந்திருக்கிறது. அதே சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு அகதிகள் முகாம் ஒன்றும் செயல்பட்டுவருகிறது.

திருச்சி சிறை
திருச்சி சிறை

இந்தச் சிறப்பு முகாமில் போலி பாஸ்போர்ட், விசா காலம் முடிந்தும் அனுமதியின்றி தங்கியது போன்ற குற்ற வழக்குகளில் சிக்கிய வங்கதேசம், இலங்கைத் தமிழர்கள், நைஜீரியா, பல்கேரியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 2019-ம் ஆண்டு, போலி ஆவணங்கள் தயாரித்த வழக்கில் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த இலியான் ஜிட்ராகர் மார்கோவ் என்பவர் கைதுசெய்யப்பட்டு, திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கதவு கடந்த ஐந்து நாள்களாக மூடப்பட்டே இருந்தது.

திருச்சி: மூடியே இருந்த சிறை கதவு; ஜன்னல் கம்பிகளை அறுத்து தப்பிய பல்கேரிய கைதி! - நடந்தது என்ன?
திருச்சி சிறை
திருச்சி சிறை

அதேநேரத்தில் கைதிகள் கணக்கெடுப்பின்போது அவர் வெளியே வராததால், சந்தேகமடைந்த பக்கத்துச் சிறைக் கைதி ஒருவர், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்துவந்த அதிகாரிகள், அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஜன்னல் கம்பியை அறுத்துக்கொண்டு கைதி தப்பிச் சென்றது தெரியவந்தது. இவர் எப்படித் தப்பினார்... யார், யார் உதவி செய்தார்கள் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல்கேரியா நபர் தப்பிய சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் திருச்சி சிறையிலிருந்து தப்பி ஐந்து நாள்களாகியும் அவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

இலியான் ஜிட்ராகர் மார்கோவ் வெளிநாடு தப்பிச் செல்லாதபடியிருக்க, திருச்சி மாநகர போலீஸார் பரிந்துரையின்படி, தமிழக டி.ஜி.பி அலுவலகம் கைதி இலியான் ஜிட்ராகர் மார்கோவ் குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து எந்த ஒரு விமான நிலையத்திலிருந்தும் இலியான் ஜிட்ராகர் மார்கோவ்வின் வெளிநாடு செல்ல முடியா படி தமிழக போலீஸார் செக் வைத்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு