Published:Updated:

``அமைச்சர்களிடம் அதிகாரிகள் `யெஸ் சார்' என்றுதான் சொல்ல வேண்டும்!" - நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

``நீங்கள் சொல்வதைப் போல அரசு செயல்படாது. அதிகாரிகள், அமைச்சர்களிடம் ‘யெஸ் சார்’ என்றுதான் சொல்ல வேண்டும்." - நிதின் கட்கரி

நாக்பூரில் பழங்குடியினர் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியொன்றில் இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ``அதிகாரிகளிடம் நான் பேசும்போது வழக்கமாக ஒன்றைச் சொல்வேன். நீங்கள் சொல்வதைப் போல அரசு செயல்படாது. அதிகாரிகள், அமைச்சர்களிடம் ‘யெஸ் சார்’ என்றுதான் சொல்ல வேண்டும். அமைச்சர்கள் சொல்வதை அதிகாரிகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும்" என்றார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

அதைத் தொடர்ந்து மகாத்மா காந்தியின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி பேசிய அவர், ``ஏழைகளின் நலனுக்காக எந்தச் சட்டமும் தடையாக இல்லை. ஏழைகளின் நலனுக்காக எந்தச் சட்டமும் தடையாக இருக்காது என்பது எனக்குத் தெரியும். ஒருவேளை அத்தகைய சட்டத்தை 10 முறை மீற வேண்டும் என்றால், நாம் அதற்கு தயங்கக்கூடாது, இதைத்தான் மகாத்மா காந்தி கூறினார்'' என்றார்.