நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு எப்போது வரும் என அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டிவரும் நிலையில், வேட்பாளர் அறிவிப்புக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது ராக்கெட் ராஜா தலைமையிலான பனங்காட்டுப்படை கட்சி.

நாங்குநேரி தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் நாடார் சமுதாயத்தினரின் வாக்குகளைக் கவரும் நோக்கத்துடன் களமிறங்கியிருக்கும் அந்தக் கட்சியின் சார்பாக, ஹரி நாடார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். திசையன்விளை அருகே உள்ள ஆனைக்குடி கிராமத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவரான ராக்கெட் ராஜா இதை அறிவித்தார்.

கழுத்திலும் கைகளிலும் ஏராளமான நகைகளுடன் காட்சியளித்த ஹரி நாடார், ‘‘நாங்குநேரி தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள் முக்கிய நோக்கம். அதற்காகப் பாடுபட வேண்டும் என்பதற்காகவே இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறோம். எங்கள் கட்சியில் இருக்கும் இளைஞர்களின் தீவிர பிரசாரத்தால் நிச்சயமாக வெற்றிபெறுவோம்’’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

விழா நடைபெற்ற ஆனைக்குடி கிராமம் முழுவதையும், பனங்காட்டுப்படை கட்சியின் இளைஞர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தனர். ஊருக்குள் வந்த வெளியாட்கள், தீவிர விசாரணைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சூழலில் ராக்கெட் ராஜா பேசுகையில், ‘‘நான் என் சொந்த ஊருக்குள் வருவதற்கே எந்த அளவுக்குச் சிரமங்களைச் சந்திக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு நேரடியாக வருவேன். நல்ல தலைவர்களின் பின்னால் அணிவகுத்து நிற்கவே நாங்கள் விரும்பினோம். ஆனால், எந்தத் தலைவரும் உருவாகாத நிலையில், நாங்களே அந்தப் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டு பனங்காட்டுப்படை கட்சியை உருவாக்கினோம். இப்போது அதன் சார்பாக வேட்பாளரையும் அறிவித்திருக்கிறோம். நமது வேட்பாளரை வெற்றியடையவைக்க வேண்டியது உங்கள் கடமை’’ என்றார்.

அவரே தொடர்ந்து, ‘‘தென்னையிலிருந்து நீரா பானத்தை எடுத்து விவசாயிகளே விற்பனை செய்வதுபோல, பனையிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரயில்பெட்டித் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் வலியுறுத்தவே இந்தத் தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறோம்’’ என்றார்.

ராக்கெட் ராஜா, ஹரி நாடார் ஆகியோர்மீது கொலை, கொலை முயற்சி எனப் பல வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில், சில வழக்குகளில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். சில வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளனர். தற்போது இருவரும் தீவிர அரசியலில் ஈடுபடுவது சர்ச்சையாகியிருக்கிறது.