அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கேபினட் அக்கப்போர்

கேபினட் அக்கப்போர்
பிரீமியம் ஸ்டோரி
News
கேபினட் அக்கப்போர்

மில்க் மினிஸ்டரை அடிக்கடி சீண்டிக்கொண்டேயிருக்கிறார் காவிக் கட்சித் தலைவரான மாஜி காக்கி.

மூத்த அமைச்சர்களில் ஒருவரான நான்கெழுத்து சீனியரை அணுகவோ பேசவோ முடியாமல் கட்சிக்காரர்கள் திணறுவது வழக்கமான விஷயம்தான். ஆனால், அவர் துறைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரியை டீல் செய்ய முடியாமல் அமைச்சரே திணறிப்போகிறாராம். “நீங்க அமைதியா இருங்க சார்… எல்லா வேலைகளையும் நான் பார்த்துக்குறேன். நீங்க எதிர்பார்க்கிறதை கலெக்ட் பண்ணி கரெக்டா கொடுத்துடுறேன்” என அமைச்சரிடம் மிகத் தெளிவாகப் பேசி அவரை அமைதியாக்கி விடுகிறாராம் அந்த நவரச அதிகாரி. மற்றவர்களிடம் சீறுகிற அமைச்சர், இவரிடம் மட்டும் பெட்டிப்பாம்பாக பம்முகிறாராம்.

மூத்த அமைச்சர் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறபோது, “வெளிநாட்டுக்குப் போய் ட்ரீட்மென்ட் முடிச்ச பின்னால பத்து வயசு குறைஞ்சுட்ட மாதிரி இருக்குய்யா. இன்னும் அஞ்சு வருசம் செக்கப்புக்குக்கூட ஹாஸ்பிட்டல் பக்கம் வர வேணாம்னு சொல்லிட்டாங்க…” எனத் தன் புகழ் பாடுவாராம். மிக நெருக்கமான நிர்வாகிகளிடம் சட்டையைத் திறந்தும் உடல் பலத்தைக் காட்டுவாராம். ஆனால், முதன்மையானவரைச் சந்திக்கிறபோது மட்டும், “ஹெல்த் ரொம்ப வீக்காயிடுச்சு தலைவரே… இன்னும் எத்தனை நாளைக்கு ஆக்டிவா இருக்கப்போறேன்னு தெரியலை…” எனப் பரிதாபம் பாடுகிறாராம். அப்படியே தன் மகனுக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுக்கச் சொல்லிக் கோரிக்கை வைக்கிறாராம். “சினிமாத்துறைக்குப் போயிருந்தா... சிவாஜியை மிஞ்சியிருப்பாருய்யா…” எனச் சொல்லிச் சிரிக்கிறார்கள் மற்ற மந்திரிகள்!

கேபினட் அக்கப்போர்

மில்க் மினிஸ்டரை அடிக்கடி சீண்டிக்கொண்டேயிருக்கிறார் காவிக் கட்சித் தலைவரான மாஜி காக்கி. சமீபத்தில்கூட ஆரஞ்ச் மில்க் சம்பந்தமாக அமைச்சர்மீது கடுமையான காட்டம் காட்டினார். இதில் டென்ஷனாகவேண்டிய மில்க் மினிஸ்டரோ உற்சாகத்தில் மிதக்கிறாராம். “இந்தாளுகிட்ட நம்ம கட்சிக்காரங்க பல பேர் நெருக்கம் வெச்சுருக்காங்க. அரசு ரகசியங்களையே கசியவிடுறாங்க. உள்ளடி வேலைகளைப் பண்ற ஆளு யாருன்னு கட்சித் தலைமை ரகசிய விசாரணை நடத்திக்கிட்டிருக்கு. இந்த நேரத்துல அந்தாளு நம்மளைத் திட்டிக்கிட்டே இருக்குறது நமக்கு நல்ல விஷயம்தானே…” என வித்தியாசமான விளக்கத்தைச் சொல்லி ஆதரவாளர்களிடம் சிரிக்கிறாராம் மில்க்!

ஆளுங்கட்சியில் இருந்தாலும், ஆழ்வார்களைப் பற்றிப் பாடுவதில் அந்த சீனியர் அசகாய சூரர். முதன்மையானவருக்கும் மிக நெருக்கமானவர். சமீபத்தில் அணில் அமைச்சர் எடுத்த சைலன்ட் நடவடிக்கை அந்த சீனியரை ரொம்பவே பாதித்துவிட்டதாம். ‘முதன்மையானவர் சொல்லி இப்படி நடக்கிறதா இல்லை அணில் அமைச்சரே தான்தோன்றித்தனமாக இப்படிச் செய்தாரா?’ என விசாரித்தாராம். முதன்மையானவரின் கவனத்துக்கு அப்பாற்பட்டு நடந்ததைக் கண்டுபிடித்தவர், நேரே செனடாஃப் ரோடு இல்லத்துக்குப் போய்க் குமுறிக் கொட்டிவிட்டாராம். விஷயம் தெரிந்தும், எதற்கும் அசராமல் அணில் அமைச்சர் அட்டகாசப் புன்னகையோடு வலம்வருவதுதான் கட்சியின் சீனியர்களையே கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.