Published:Updated:

`கட்சிப் பதவியைத் தொடர்ந்து அமைச்சர் பதவி!'- ராஜேந்திர பாலாஜிக்கு `செக்' வைக்கும் மதுரைப் புள்ளி

ராஜேந்திர பாலாஜி

ஆவின் நிர்வாகத்தில் எந்தப் பிரச்னைகள் வந்தாலும் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் மறைமுகமாகத் தெரிவித்துள்ளனர்.

`கட்சிப் பதவியைத் தொடர்ந்து அமைச்சர் பதவி!'- ராஜேந்திர பாலாஜிக்கு `செக்' வைக்கும் மதுரைப் புள்ளி

ஆவின் நிர்வாகத்தில் எந்தப் பிரச்னைகள் வந்தாலும் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் மறைமுகமாகத் தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
ராஜேந்திர பாலாஜி

``பா.ஜ.க டெல்லி வட்டாரத்தில் தொடர்பு, ரஜினியிடம் மறைமுக பேச்சுவார்த்தை, மோடி எங்கள் டாடி, கமலின் நாக்கை அறுக்க வேண்டும், போலி போராளிகளுக்கு இன்று நாட்டில் நடக்கக் கூடிய சம்பவம் ஒரு பாடம்.. எனத் தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளைப் பேசியதோடு முதல்வரிடம் வாக்குவாதம் செய்ததால் அவரை மாவட்டச்செயலாளர் பதவியிலிருந்து விடுவித்திருக்கிறார் எடப்பாடி. தற்போது அமைச்சர் பதவியிலிருந்து தூக்கும் படலத்தை அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. இப்பிரச்னையால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பால் விநியோகம் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே சப்ளை செய்யப்படும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் அறிவித்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

`தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும்; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை' என ஆவின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழல் நிலவிக்கொண்டிருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் பதில் அளிக்காமல் ஆவின் நிர்வாகத்தின் அதிகாரிகளைப் பதில் அளிக்க வைத்தது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். `` ராஜேந்திர பாலாஜியிடம் இருக்கும் அமைச்சர் பதவியைப் பறிக்கும் வேலையில் சிலர் இறங்கியிருக்கிறார்கள். அதற்கான வேலைகளில் மதுரையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஈடுபட்டு வருகிறார். அதன் அடுத்தகட்டமாக, ஆவின் நிர்வாகத்தில் எந்தப் பிரச்னைகள் வந்தாலும் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் மறைமுகமாகத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது முடிந்துள்ள நிலையில், அவர் பதவியை உடனடியாக பறிக்க முடியாது என்பதால் அடுத்த சில நாள்களில் அமைச்சர் பதவி பறிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட வைக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன.

மேலும், சிவகாசி திருத்தங்கலில் உள்ள அவரது வீட்டில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த காவலர்களும் வாபஸ் வாங்கப்பட்டுள்ளனர். இது எல்லாமே திட்டமிட்டு நடந்துகொண்டிருக்கிறது" என்கின்றனர்.