Published:Updated:

தமிழக அரசு செலவழிக்காத ரூ.10,000 கோடி!- சி.ஏ.ஜி அறிக்கையால் ஆதங்கப்படும் வானதி

சத்யா கோபாலன்

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு அளித்த நிதியில் பெரும் பகுதி பயன்படுத்தப்படாமல் உள்ளதால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

வானதி ஸ்ரீனிவாசன்
வானதி ஸ்ரீனிவாசன்

தமிழக சட்டமன்றக் கூட்டத்தில், இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) சமீபத்தில் ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் தமிழக அரசின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய நிதியில் பெரும் பகுதி பயன்படுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.ஏ.ஜி
சி.ஏ.ஜி
wikipedia

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், நிதித் துறை, பள்ளிக் கல்வி, நகராட்சி நிர்வாகம், நீர் வழங்கல், நெடுஞ்சாலைத் துறை, துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் 10,000 கோடி ரூபாய் அதாவது 4.62 சதவிகிதம் பணம் எந்தத் திட்டத்துக்கும் செலவிடப்படாமல் உள்ளதாகவும், நிதியாண்டின் கடைசி நாளில் இந்தப் பணம் அந்தந்த மத்திய துறைகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசின் முரண்பாடு மற்றும் மோசமான திட்டம் நிறைவேற்றுதல் போன்றவற்றையே இது காட்டுவதாக சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், முந்தைய ஆண்டுகளை விடக் கடந்த ஆண்டு, தமிழக அரசின் நிலுவைக் கடன் 14.57 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், மாநிலத்தின் நிதி வளர்ச்சி குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் அனைத்து துறைகளையும் சேர்த்து 205 நிதி மோசடி வழக்குகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதால் 1.24 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், துறைகளில் நடந்த 30 திருட்டு வழக்குகளின் மூலம் 12 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு
தமிழக அரசு

இது பற்றி நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன், ``மத்திய அரசின் நேரடி திட்டத்துக்கு மாநில அரசுக்கு நேரடியாக நிதி வழங்கும். மாநில அரசின் திட்டங்களுக்கு நிதி ஆயோக் வழியாக தற்போது நிதி வருகிறது. மத்திய அரசு வழங்கும் நிதிகளைப் பயன்படுவதுதான் நமக்கு நன்மை. அனுமதிக்கப்பட்ட நிதிகளைத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தவில்லை என்றால், அது மீண்டும் மத்திய அரசுக்குச் சென்றுவிடும். 10,000 கோடி ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. இதை மாநில அரசு பல்வேறு துறைகளில் பயன்படுத்தாமல் உள்ளது என்றால் சற்று அதிர்ச்சியாகத்தான் உள்ளது. நமக்குச் செலவிடப்படவேண்டிய திட்டங்கள் நிறைய இருக்கும்போது மத்திய அரசு அளிக்கும் பணத்தைக்கூட மாநில அரசு செலவிடாமல் இருப்பது வருத்தத்தைத் தருகிறது. விரைவில் மாநில அரசு இதைக் கருத்தில் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்” எனக் கூறினார்.