Published:Updated:

அனுமதியின்றி வீடுகளில் ஒட்டப்படும் தேர்தல் சுவரொட்டிகள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விதிமுறை மீறும் வேட்பாளர்கள்
விதிமுறை மீறும் வேட்பாளர்கள்

உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் குறித்துப் புகார் வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி, வேட்பாளர்களும், அந்தந்தக் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இந்த விதிகளை எந்த வேட்பாளரும் மீறக் கூடாது.

விதிமுறை
விதிமுறை

ஆனால், தேர்தல் நடைபெறும் பல இடங்களில் தேர்தல் நடத்தை விதி மீறப்படுவதாகவும், அது குறித்து அந்தப் பகுதி தேர்தல் அலுவலரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற புகாரும் எழுந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியதிலிருக்கும் நடுவக்கரை கிராம ஊராட்சியில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் விதிப்படி, எந்த ஓர் அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ, தனிநபர் இடத்திலோ அல்லது பொது இடத்திலோ எழுத்துபூர்வ அனுமதியின்றி கொடிக்கம்பங்களைக் கட்டவும், பதாகைகளை வைக்கவும், அறிவிப்புகளை ஒட்டவும், வாசகங்களை எழுதவும் தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது. ஆனால், அந்தப் பகுதியில் பலரின் வீடுகளிலும் யாருடைய அனுமதியும் பெறாமல் வீட்டின் சுவர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார்கள்.

சுவரொட்டிகள்
சுவரொட்டிகள்

பல்வேறு கட்சிகளின் கட்சி வேட்பாளர்களும் அவர்களது வீட்டில் சுவரொட்டி ஒட்டியது குறித்து, சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் அந்தப் பகுதி தேர்தல் அதிகாரியிடம் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியருக்குப் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள்மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியப் போக்கில் செயல்படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்.?

உள்ளாட்சித் தேர்தல்: சூடுபிடிக்கும்  களம்... 9 மாவட்டங்களில் வெற்றிவாய்ப்பு யாருக்கு அதிகம்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு