Published:Updated:

"ராகுலின் பேச்சுக்காக காந்தி என்ற குடும்பப் பெயர்கொண்ட அனைவரையும் குறை கூற முடியுமா?" - கிரண் ரிஜிஜு

சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

"ராகுல் காந்தி ஒட்டுமொத்த ஓ.பி.சி சமூகத்தையும் இழிவுபடுத்தியிருக்கிறார்." - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

Published:Updated:

"ராகுலின் பேச்சுக்காக காந்தி என்ற குடும்பப் பெயர்கொண்ட அனைவரையும் குறை கூற முடியுமா?" - கிரண் ரிஜிஜு

"ராகுல் காந்தி ஒட்டுமொத்த ஓ.பி.சி சமூகத்தையும் இழிவுபடுத்தியிருக்கிறார்." - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

2019-ம் ஆண்டு ராகுல் காந்தி, "ஏன் அனைத்துத் திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரையே கொண்டிருக்கின்றனர்" என்று பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி, "அரசியல் எதிரிகள்மீது வழக்கு தொடுத்து, அவர்களை அழிக்க சதித்திட்டம் தீட்டுகிறது பா.ஜ.க" என கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதோடு, இந்த வழக்கு குறித்து மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன.

நரேந்திர மோடி - ராகுல் காந்தி
நரேந்திர மோடி - ராகுல் காந்தி

இந்த நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம், நமது ஆயுதப் படைகள், இந்திய நிறுவனங்கள் ஆகியவற்றை அவமதித்திருக்கிறார் என்பதற்காக, காந்தியின் குடும்பப் பெயரை வைத்திருக்கும் அனைவரையும் நம்மால் குறை கூற முடியாது. ராகுல் காந்தி மிகவும் இழிவான கருத்தைத் தெரிவித்திருக்கிறார். ஒட்டுமொத்த ஓபிசி சமூகத்தையும் இழிவுபடுத்தியிருக்கிறார். இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால், சில காங்கிரஸ் தலைவர்களே அவரைக் காக்க முயல்வதுதான்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.