Published:Updated:

`பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்பே ராஜினாமா; உத்தவ் மீண்டும் முதல்வராக முடியாது!'- சுப்ரீம் கோர்ட்

உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே - உச்ச நீதிமன்றம்

சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 16 பேரின் பதவிப் பறிப்பு வழக்கை, அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

Published:Updated:

`பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்பே ராஜினாமா; உத்தவ் மீண்டும் முதல்வராக முடியாது!'- சுப்ரீம் கோர்ட்

சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 16 பேரின் பதவிப் பறிப்பு வழக்கை, அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே - உச்ச நீதிமன்றம்

மகாராஷ்டிராவில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. இதையடுத்து சிவசேனாவின் பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கி உத்தரவிட்டது. உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது, கடந்த ஜூன் மாதம் கட்சித் தலைமையின் முடிவுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, 15 சிவசேனா எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று கோரி உத்தவ் தாக்கரே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சிவசேனாவின் பெயர், சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் முடிவெடுக்கத் தடைவிதிக்க வேண்டும் என்றும், தாக்கரே ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் கமிஷன் ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்ட நிலையில், சமீபத்தில் 16 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிப்பு தொடர்பான வழக்கில் மட்டும் விசாரணை நடந்துவந்தது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இந்த வழக்கு விசாரணை சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு முடிவடைந்தது. வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்க்வி ஆகியோர் உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரானார்கள். ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஹரிஷ் சால்வே, மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் ஆஜரானார்கள். உத்தவ் தாக்கரே தரப்பினர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மிகவும் எதிர்பார்த்திருந்தனர். தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே அளித்தப் பேட்டியில், ``எங்களது அரசுக்கு 184 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது. எனவே, தேவைப்பட்டால் நாங்கள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுவோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

வழக்கு விசாரணையின்போது, ``உத்தவ் தாக்கரே அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்பு, ராஜினாமா செய்திருப்பதால், மீண்டும் எப்படி அதே அரசை அமைக்க முடியும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இன்று காலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டெல்லி அரசுக்கும், ஆளுநருக்குமிடையே நடக்கும் மோதல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினர். அதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், 16 எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். அதோடு இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ``ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ கோகாவாலாவை கொறடாவாக சபாநாயகர் அங்கீகரித்தது சட்டவிரோதம். கோகாவாலாவைக் கொறடாவாக சபாநாயகர் நியமிக்க முடியாது.

உத்தவ் - ஷிண்டே
உத்தவ் - ஷிண்டே

சட்டமன்ற எம்.எல்.ஏ-க்களுக்கு உத்தரவிடும் கொறடாவை அரசியல் கட்சிகள் தேர்வுசெய்யலாம். சபாநாயகர் பங்கு குறித்து அதிக நீதிபதிகள்கொண்ட அமர்வு முடிவுசெய்யும். மகாராஷ்டிரா ஆளுநர் அரசின் பெரும்பான்மை குறித்து சந்தேகப்பட எந்தவித முகாந்திரமும் இல்லை. சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் யாரும் தாங்கள் அரசுக்குக் கொடுக்கும் ஆதரவைத் திரும்பப் பெறப்போவதாக ஆளுநரிடம் தெரிவிக்கவில்லை. உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. அதனால் அவரது ராஜினாமாவை ரத்துசெய்ய முடியாது. ஆளுநர் அரசியல் பகுதியில் நுழையவும், உட்கட்சி விவகாரத்தில் தலையிடவும் உரிமை கிடையாது.

சில உறுப்பினர்கள் கட்சியைவிட்டு வெளியேற விரும்புகிறார்கள் என்பதற்காக அதனடிப்படையில் ஆளுநர் செயல்பட முடியாது. தாக்கரே பெரும்பான்மையை இழந்துவிட்டார் என்ற கடிதத்தை ஆளுநர் நம்பக் கூடாது. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு மற்ற அணிகளும் கடிதம் கொடுத்திருக்க வேண்டும். உட்கட்சி விவகாரங்களைத் தீர்க்க சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதைப் பயன்படுத்தக் கூடாது. அரசியல் சாசனத்தில் இல்லாத அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தக் கூடாது.

சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்

அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் முடிவு எடுக்க வேண்டும். ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ கோகாவாலாவைக் கொறடாவாக சபாநாயகர் நியமித்தது சட்ட விரோதம். கோகாவாலாவை கொறடாவாக சபாநாயகர் நியமிக்க முடியாது. ஆளுநரின் சட்டவிரோத செயலால் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகியிருக்கிறார்" என்று தெரிவித்தனர்.