Published:Updated:

ராஜீவ் காந்தி முதல் மோடி வரை; வளர்ச்சிக்கு உதவியவர்கள்..! - கௌதம் அதானி பதில்

கௌதம் அதானி

பிரதமர் மோடியும், நானும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு என்னை எளிதாக இலக்காக்குகிறார்கள்.

ராஜீவ் காந்தி முதல் மோடி வரை; வளர்ச்சிக்கு உதவியவர்கள்..! - கௌதம் அதானி பதில்

பிரதமர் மோடியும், நானும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு என்னை எளிதாக இலக்காக்குகிறார்கள்.

Published:Updated:
கௌதம் அதானி

பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி, `என் தொழில் வளர்ச்சியை எந்த அரசியல் தலைவருடனும் தொடர்புப்படுத்திப் பார்க்க முடியாது' எனத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``என்னுடைய தொழில் பயணத்தைச் சில கட்டங்களாகப் பிரித்துக் கூறலாம். நான் சொல்வது நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. எங்கள் அதானி குழுவின் வெற்றியை குறுகியகாலக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போதுதான், அரசியல் தலைவர்கள் மூலம் ஆதாயம் தேடுவதாக குற்றச்சாட்டுகள் சமீபகாலமாக முன்வைக்கப்படுகின்றன.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

உண்மை என்னவென்றால், என் தொழில்முறை வெற்றி எந்தவொரு தனிப்பட்ட தலைவராலும் கிடைத்ததல்ல. மாறாக கடந்த 30 ஆண்டுகளாக பல தலைவர்கள் மற்றும் அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை மற்றும் நிறுவன சீர்திருத்தங்களால்தான் சாத்தியமானது. பிரதமர் மோடியும், நானும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு என்னை எளிதாக இலக்காக்குகிறார்கள். இது போன்ற கதைகள் எனக்கு எதிராகக் கூறப்படுவது துரதிர்ஷ்டவசமானது.

அதானி குழுமத்தின் பயணம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தொடங்கியது. என்னுடைய தொழில் வளர்ச்சிக்கு ராஜீவ் காந்தி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட கொள்கைகள் (Export-Import) தான் காரணம் என்று கூறினால் ஆச்சர்யப்படுவார்கள். அதன் பிறகு 1991-ல் அப்போதைய பிரதமர்கள் நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் கொண்டுவந்த மிக முக்கியப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம் பல தொழில்துறையினரும் பலனடைந்தனர். அவர்களில் நானும் ஒருவன்.

மோடி-அதானி
மோடி-அதானி

நான் என்னுடைய மூன்றாவது கட்டத்தை 1995-ல் எட்டிவிட்டேன். அதற்குக் காரணம், அப்போதைய குஜராத் முதல்வரான கேஷுபாய் படேல். அவர் தொலைநோக்குப் பார்வைகொண்ட வளர்ச்சி சார்ந்த கொள்கைகளைக் கொண்டுவந்தார். இதில் முக்கியமானது கடலோர வளர்ச்சி. இது என்னைத் துறைமுக நிறுவனத்தை உருவாக்கக் தூண்டியது.

அதன் பிறகு நான்காவதாக, 2001-ல் அடுத்த கட்டத்தை எட்டிவிட்டேன். அப்போது குஜராத் முதல்வராக பிரதமர் மோடி இருந்தார். அப்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தொழில்துறை வளர்ச்சி, இருந்தது. தற்போது அதே போன்றதொரு வளர்ச்சியை நாடு முழுவதும் கொண்டுவருவதைப் பார்க்க முடிகிறது. இப்படிப் பல தலைவர்கள், பல அரசுகள் மற்றும் கொள்கைகள் என்னுடைய தொழில் வளர்ச்சியில் அடங்கியிருக்கின்றன" எனத் தெரிவித்திருக்கிறார்.