Published:Updated:

ஒன்றிய அரசு விவகாரம்: `தடை விதிக்க முடியாது!' -வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

``கொரோனா தடுப்பூசி போடுங்கள் என நீதிமன்றமமும், அரசும் பொது மக்களை வலியுறுத்தி வருகிறது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதும், போடாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட உரிமை. அதுபோல...”

ஒன்றிய அரசு விவகாரம்: `தடை விதிக்க முடியாது!' -வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

``கொரோனா தடுப்பூசி போடுங்கள் என நீதிமன்றமமும், அரசும் பொது மக்களை வலியுறுத்தி வருகிறது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதும், போடாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட உரிமை. அதுபோல...”

Published:Updated:
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

``தமிழ்நாடு முதலமைச்சரும், அமைச்சர்களும் இப்படித்தான் பேச வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இது சம்பந்தமான வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ``புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசாங்கம், இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறிவருகிறது. மேலும் இவ்வாறு அழைப்பதை ஊக்கப்படுத்துகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது. இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். மேலும் இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்த பின்புலத்தில் தீவிரவாத சக்தியின் உந்துதல் இருப்பதாக சந்தேகம் எழுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

மேலும், கடந்த வாரம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் ஒன்றியம் குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளித்த முதலமைச்சர், `இந்தியா யூனியன் கவர்மெண்ட் என்று அழைக்கப்படுவதால் அதை ஒன்றிய அரசு என்று கூறுகிறோம். இது ஒன்றும் குற்றமில்லை’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

இது முற்றிலும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது. சட்டமன்றத்தை இந்த அரசு தவறாக வழிநடத்தி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

இதேபோல் சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் உரையின் இறுதியில் `ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தை இடம் பெறவில்லை. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்து தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தலைமை செயலரிடம் மனு அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும் இந்திய அரசை இந்தியா அல்லது பாரதம் என்றே குறிப்பிட உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் சிவஞானம்- ஆனந்தி அமர்வு, "கொரோனா தடுப்பூசி போடுங்கள் என நீதிமன்றமமும், அரசும் பொது மக்களை வலியுறுத்தி வருகிறது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதும், போடாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட உரிமை.

அதுபோல இந்திய அரசு அல்லது பாரத் என்று அழைப்பதற்கும், சட்டமன்றத்தில் இதுதான் பேச வேண்டும் எனவும் தமிழக முதல் அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஏனென்றால் இது அவர்களின் தனிப்பட்ட உரிமை" என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.