Published:Updated:

சர்ச்சைக்குரிய ஆசாத் காஷ்மீர் கருத்து - சி.பி.எம் முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் மீது வழக்கு!

சி.பி.எம் முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல்

ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை `இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ எனத் தனது பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்த சி.பி.எம் முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீலுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன.

சர்ச்சைக்குரிய ஆசாத் காஷ்மீர் கருத்து - சி.பி.எம் முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் மீது வழக்கு!

ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை `இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ எனத் தனது பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்த சி.பி.எம் முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீலுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன.

Published:Updated:
சி.பி.எம் முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல்

கேரள மாநிலத்தை ஆளும் சி.பி.எம் கட்சியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கே.டி.ஜலீல். இதற்கு முந்தைய பினராயி விஜயன் ஆட்சியில் கேரள உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். மேலும், தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு உதவியதாகவும், யு.ஏ.இ தூதரகம் மூலம் `புனிதநூல்’ என்ற பெயரில் கடத்தலில் ஈடுபட்டதாகவும் இவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறை எம்.எல்.ஏ ஆகியும் புதியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்பதால், அமைச்சராக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர் கே.டி.ஜலீல்.

இவர் கேரள சட்டசபையின் வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை குழுவில் உறுப்பினராக இருக்கிறார். இந்தக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக கே.டி.ஜலீல் சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீருக்குச் சென்றிருந்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட கே.டி.ஜலீல் பயணக்கட்டுரை ஒன்றையும் பதிவுசெய்திருந்தார். அந்தக் கட்டுரையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, `ஆசாத் காஷ்மீர்’ என்றும், ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை `இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ எனவும் பதிவிட்டிருந்தார். இதையடுத்து கே.டி.ஜலீலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

கே.டி.ஜலீல்
கே.டி.ஜலீல்

தேச ஒருமைப்பாட்டைச் சீர்குலைப்பதாக பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் கே.டி.ஜலீலைக் கண்டித்தன. சி.பி.எம் கட்சியும் அது அவரின் தனிப்பட்ட கருத்து என ஒதுங்கிக்கொண்டது. இந்த நிலையில், நாட்டின் நன்மைக்காகவும், மக்களின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படாமலிருக்கவும் அந்த வரிகளை திரும்பப் பெறுவதாக கே.டி.ஜலீல் கூறியிருந்தார். இந்த நிலையில் எழுமற்றம் பகுதியைச் சேர்ந்த அருண் மோகன் என்பவர் கே.டி.ஜலீல் மீது வழக்கு பதிய வேண்டும் என திருவல்லா ஜுடிஷியல் ஒன்றாம் கிளாஸ் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த மனுவை விசாரித்த கோர்ட், கே.டி.ஜலீல்மீது வழக்கு பதிவுசெய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில் கீழ்வாய்ப்பூர் போலீஸார் கே.டி.ஜலீல் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்துள்ளனர். அதில் அரசியல் அமைப்பை அவமானப்படுத்தியதாகவும், நாட்டின் ஒருமைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் உள்நோக்கத்துடன் கருத்துகளை வெளியிட்டதாகவும் ஐ.பி.சி 153(பி), தேசிய மரியாதைச் சட்டம் செக்‌ஷன் 2 படியும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.