Election bannerElection banner
Published:Updated:

கரூர்: 'மணல்' பேச்சு; செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி ( நா.ராஜமுருகன் )

செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க கூட்டணி சார்பில், தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், செந்தில் பாலாஜி மீது கரூர் நகர காவல் நிலைய போலீஸார், ஐ.பி.சி 153, 189, 505 (1) (பி), 506 (1), 353, 511 ஆகிய ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

மாட்டுவண்டியில் மணல் எடுப்பது குறித்து தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி பிரசாரத்தின் போது பகிரங்கமாக ஆதரித்துப் பேசிய பேச்சு, சர்ச்சையானது. இந்தநிலையில், மணல் அள்ளுவதை ஆதரித்துப் பேசிய செந்தில் பாலாஜியின் மீது, கரூர் நகர காவல் நிலையத்தில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி பிரசார நிகழ்ச்சி
செந்தில் பாலாஜி பிரசார நிகழ்ச்சி
நா.ராஜமுருகன்

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பிரசாரத்தில் ஈடுப்பட்டபோது பேசிய செந்தில் பாலாஜி, ``தி.மு.க ஆட்சிக்கு வந்து, முதல்வராக மு.க.ஸ்டாலின் கையெழுத்து போட்ட அடுத்த நொடியே, மாட்டுவண்டி உரிமையாளர்கள், ஆற்றுக்குள் இறங்கி மணல் அள்ளலாம். அதை யாரும் தடுக்க முடியாது. அப்படியே தடுக்கும் அதிகாரிகள் இங்கே பதவியில் இருக்க முடியாது" என்று பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பலரும், `மணல் கடத்தலை ஊக்குவிக்கும் வகையில் பேசுகிறார்' என்று அவருக்கு எதிராகக் கடும் விமர்சனம் செய்தனர். அதோடு, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், செந்தில் பாலாஜியின் இந்தப் பேச்சு குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார். அமைச்சர் ஜெயகுமாரும், செந்தில் பாலாஜியின் இந்தப் பேச்சுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, ``உள்ளூர் தேவைக்காக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவது காலம் காலமாக நடைமுறையில் உள்ள விஷயம். இது சட்டத்துக்குப் புறம்பானது என்று எங்கும் குறிப்பிடபடவில்லை. லாரிகளில் மணல் எடுப்பதுதான் தவறு. மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மாட்டுவண்டி உரிமையாளர்கள் கோர்ட்டில் கேஸ் போட்டனர். அவர்களுக்கு சார்பாக தீர்ப்பும் வந்தது. தமிழக அரசு, ஐந்து இடங்களில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க இடம் ஒதுக்குவதாகச் சொன்னது. ஆனால், இன்றுவரை இடத்தை ஒதுக்கவில்லை. நான் பேசியது சட்டத்துக்கு உட்பட்டதுதான்" என்று விளக்கம் அளித்தார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

இதற்கிடையில், `மணல் அள்ளுவதை வெளிப்படையாக ஆதரித்துப் பேசிய செந்தில் பாலாஜி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அ.தி.மு.க கூட்டணி சார்பில், தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், செந்தில் பாலாஜி மீது, கரூர் நகர காவல் நிலைய போலீஸார், ஐ.பி.சி 153, 189, 505 (1) (பி), 506 (1), 353, 511 ஆகிய ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு