Published:Updated:

`பாடப் புத்தகங்களில் தலைவர்களின் சாதிப் பெயர்கள் நீக்கம்!’ - தமிழ்நாடு பாடநூல் கழகம் நடவடிக்கை

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

தமிழக பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், அரசியல் ஆளுமைகள் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் பெயரின் பின்னாலிருக்கும் சாதிப் பெயர்களை நீக்கியிருக்கிறது தமிழ்நாடு பாடநூல் கழகம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாடு பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், அரசியல் ஆளுமைகள் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் பெயரின் பின்னாலிருக்கும் சாதிப் பெயர்களை நீக்கியிருக்கிறது தமிழ்நாடு பாடநூல் கழகம்.

குறிப்பாக, பன்னிரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருக்கும் `பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்’ என்ற பாடப்பகுதியில், `தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்’ என்றிருந்த பெயர் தற்போது `உ.வே.சாமிநாதர்’ என மாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல் `மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்பது `மீனாட்சி சுந்தரனார்’ எனவும், `நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை’ என்பது `ராமலிங்கம்’ எனவும் மாற்றப்பட்டுள்ளது.

புத்தகங்கள்
புத்தகங்கள்

இதுமட்டுமல்லாமல், தமிழின் முதல் நாவலாசிரியர் `மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ என்ற பெயரை `வேதநாயகம்’ எனவும், இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான `சி.வை.தாமோதரம் பிள்ளை’ என்ற பெயரை `சி.வை.தாமோதரம்’ என்றும் பின்னால் இருக்கும் சாதிப்பெயரை நீக்கி தமிழ்நாடு பாடநூல் கழகம் புதிய திருத்தம் மேற்கொண்டுள்ளது.

 தமிழக அரசு அறிவிப்பு!
தமிழக அரசு அறிவிப்பு!

ஏற்கெனவே தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறையில் இருக்கும் சட்டமான, ``தமிழ்நாட்டின் சாலைகள், தெருக்கள், அலுவலகக் கட்டடங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்படும்போது அவர்கள் பெயரின் பின்னாலிருக்கும் சாதிப் பெயர் இடம்பெறக் கூடாது" என்ற அறிவிப்பின்படியே இந்தச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அனைத்து வகுப்பு பாடப் புத்தகங்களிலும் சாதிகளை நீக்கும் பெயர் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு