Published:Updated:

தமிழ்நாடு அரசின் அழுத்தத்தால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தள்ளிவைப்பா?! - பின்னணி என்ன?

காவிரி

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னணி என்ன?

தமிழ்நாடு அரசின் அழுத்தத்தால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தள்ளிவைப்பா?! - பின்னணி என்ன?

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னணி என்ன?

Published:Updated:
காவிரி

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசு அதி தீவிரப்படுத்திவருகிறது. அதன்படி, அணை தொடர்பாக முதற்கட்ட பணிகளைத் தொடங்க, பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியது ஆளும் பா.ஜ.க அரசு. இதற்கு எதிர்வினையாற்றும்விதமாக மேக்கேதாட்டூ அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணை விவகாரத்தில் மத்திய அரசு எந்தவிதமான அனுமதியும் தரக் கூடாது என்று வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடகா சட்டமன்றம்
கர்நாடகா சட்டமன்றம்

அதேபோல, கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் மேக்கேதாட்டூவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரசாரம் செய்துவருகிறது. அதேபோல, மாநில உரிமை பேசும் அமைப்புகளும் மேக்கேதாட்டூவில் அணைகட்டியே ஆக வேண்டும் என்று கூறிவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், டெல்லியில் வரும் 17-ம் தேதி நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மேக்கேதாட்டூ அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தார் கூறியிருந்தார். மேலும், கர்நாடக அரசு மேக்கேதாட்டூ அணையின் திட்ட வரைவு அறிக்கை குறித்து எழுத்துபூர்வமாக வாதங்களை முன்வைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

எஸ்.கே.ஹல்தார்
எஸ்.கே.ஹல்தார்

ஆணையத் தலைவரின் இந்தக் கருத்து, காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் எதிராக இருப்பதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே, "மேக்கேதாட்டூ அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அது குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பது விதிமுறை மீறலாகும். ஆணையத்தின் இந்த முடிவு காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது. மேக்கேதாட்டூ குறித்து கூட்டத்தில் விவாதிப்பது காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரம்பை மீறிய நடவடிக்கையாக அமையும். மேக்கேதாட்டூ குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது" என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

ஸ்டாலின், துரைமுருகன்
ஸ்டாலின், துரைமுருகன்

இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேக்கேதாட்டூ குறித்து விவாதிப்பதற்குத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதி எதிர்ப்பு தெரிவிப்பார். ஆணையத்தின் வரம்பு மீறிய செயல் நீதிமன்றத்திலும் ஆணையக் கூட்டத்திலும் சுட்டிக்காட்டப்படும்" என்று கருத்து தெரிவித்தார். இதற்கிடையே, "வழக்கு நிலுவையில் இருப்பதால், ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டூ விவகாரம் குறித்துப் பேசக் கூடாது என்று மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுத்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 15 கூட்டங்களை நட‌த்தியிருக்கிறது. அப்போதெல்லாம் தமிழ்நாடு அரசு மேகேதாட்டூ திட்டத்துக்கு எதிராகப் பேசவில்லை. தற்போது அரசியல் உள்நோக்கத்துடன் மேகேதாட்டூ திட்டம் குறித்து விவாதிக்கக் கூடாது என எதிர்க்கிறது. தமிழ்நாடு அரசு காவிரியைவைத்து அரசியல் செய்கிறது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கும் விஷயங்கள் குறித்து ஆணையம்தான் முடிவெடுக்கும். எனவே, இதில் தமிழ்நாடு அரசு தலையிட முடியாது. ஆணையத்தின் சுதந்திரத்தில் தலையிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஆணையம் தனது அதிகாரத்தை மீறிச் செயல்படவில்லை" என்று கூறினார். இதற்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் கருத்து தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வக்காலத்து வாங்குவது போன்றே உள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

ஆனால், அணை விவகாரம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஆணையக் கூட்டத்தில், அது குறித்துப் பேசுவது நியாயமே இல்லை. இதைத்தான் முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சரும் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினர். இது குறித்து முடிவெடுக்க மத்திய அரசு அவகாசம் தர வேண்டும். எனவேதான், ஆணையக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை 23-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேக்கேதாட்டூ குறித்து ஆலோசிக்கப்படும் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டால், தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism