Published:Updated:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகார்; ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தது சிபிஐ

ஆ.ராசா

திமுக எம்.பி ஆ.ராசா வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

1999 முதல் 2010 ஆண்டு காலத்தில் தற்போதைய தி.மு.க எம்.பி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 16 பேர்மீது 2015-ம் ஆண்டு சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது. இந்த வழக்கு தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், சி.பி.ஐ இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அதில், ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.53 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த குற்றப்பத்திரிகையில், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆ.ராசா முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.